வளர்முக உயிரினத் தோற்றம்
நேர்/வளர்முக உயிரினத் தோற்றம் அல்லது தொகுதி உருமாற்றம் (anagenesis) என்பது சிறப்பினமேதும் உருவாகாமலே மூதாதை உயிரிக்குழுமத்தில் உயிரி ஏதும் நிலவாமல் அழிந்துவிடும் அளவுக்கு விரைந்த வளர்ச்சிப் படிமலர்ச்சியால் புத்துருவ இனமொன்று உருவாதலாகும். புதிய உயிரினமாக உருமாறிய மூதாதையினம் புத்தினத்தால் முற்றிலும் வெல்லப்படுகிறது. இது கவைபிரி உயிரினத் தோற்றத்துக்கு (cladogenesis) எதிரானதாகும். மேலும் இது ஒருங்கு படிமலர்ச்சி உருவாக்கும் உயிரிகளை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிடுகிறது. ஆனால் இது இணைபடிமலர்ச்சியால் உருவாகும் உயிரிகளை ஏற்கிறது என்பதை நடத்தைச் செயலொப்பாய்வுகள் (homologues) நிறுவியுள்ளன.[1]
என்றாலும் மெதுவான தொகுதி மாற்றத்தை விளக்க, இடைவிட்ட சமனிலைகள் (Punctuated Equilibria) கருதுகோள் முன்மொழியப்பட்ட்து. இந்த கருதுகோளின்படி தொகுதி உருமாற்றம் என்பதே பொருளற்றதாகி விடுகிறது. ஏனெனில் மூதாதையின் கால்வழிகள்/வழித்தோன்றல்களில், புதிய உயிரினம் தோன்றும்வரை, அவற்றின் வாழ்நாள் முழுவதும் மாற்றமேதுமே ஏற்படுவதில்லை.நேர்/வளர்முக உயிரினத் தோற்றமே இதனால் உருவாக வழியில்லாமல் போய்விடுகிறது.[2]
"ஆஸ்திரலோபிதிசஸ் அனாமென்சிஸ்" தோற்றங்களையும் புறவடிவப் பன்மையையும் புரிந்துகொண்டு, மாந்தக்குரங்குத் தொகுதிமரபுத் தருவை உருவாக்க அண்மைக்கால படிமலர்ச்சி ஆய்வுகள் வளர் உயிரினத் தோற்ற முறையும் கவைபிரி உயிரினத் தோற்ற முறையும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றனர். இது வாய்ப்புள்ள வளர்முக உயிரினத் தோற்றத்துக்கான தொல்லுயிர் எச்சச் சான்றுகளைத் தேடவும் ஊக்கமூட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.[3]
உயிரினக் குழுமலில் போதுமான சடுதிமாற்றங்கள் ஏற்பட்டு நிலைத்ததும் அது தன் மூதாதைக் குழுமலில் இருந்து கணிசமான அளவுக்கு வேறுபடும்போது அதற்குப் புதிய உயிரினப் பெயரை இடலாம். இத்தகைய உயிரினத் தொடர்கள் படிமலர்ச்சிக் கால்வழிகள் எனப்படுகின்றன.[4][5] படிமலர்ச்சிக் கால்வழி நெடுக அமையும் பல்வேறு உயிரினங்கள் "காலவழி இனங்கள்" (chronospecies) ஆகும். காலவழி இனங்களின் மூதாதைக் குழுமல்கள் அழிந்துபடாதபோது அவை கவைபிரி உயிரினத் தோற்றம் ஆகின்றன. மேலும் மூதாதை உயிரினம், படிமலர்ச்சித் தரவகை வாய்ந்த ஓர் இணைதொகுதிவழி உயிரினம் அல்லது ஓர் இணைமரபு உயிரினம் ஆகிறது. விரிந்து பரந்த உயிரிக் குழுமல்கள் நிலவும் உயிரினத்தில் இந்நிலை பொதுவாக அமைகிறது.
மேலுள்ள வரையறையில் இருந்து, புதிய உயிரினமாக வரையறுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் ஓருயிரினத்தில் கணிசமாக அமையும்போது உயிரியல் வகைபாட்டாளர்கள் இடையில் எவ்வளவு வேறுபாடுகள் உருவாகும் என்பதை எளிதாக உணரலாம். மேலும் நேர்/வளர்முக உயிரினத் தோற்றம் "மெதுவான படிமலர்ச்சி" என்றும் வழங்கப்படுகிறது.
மார்க் எரெசெப்ஸ்கி எனும் அறிவியல் மெய்யியல் அறிஞர் இணைத்தொகுதிமரபு வகையன்கள் வளர்முக உயிரினத் தோற்றத்தின் விளைவுகளென வாதிடுகிறார். பறவைகளை உருவாக்கிய கால்வழி, பல்லிகளில் இருந்தும் முதலைகளில் இருந்தும் கணிசமான அளவுக்குப் பிரிந்து விரிந்தது. இது படிமலர்ச்சி வகைப்பாட்டாளர்கள் பறவைகளை பல்லிகளில் இருந்தும் முதலைகளில் இருந்தும் தனியாக வகைப்படுத்த வைத்தது. இவை ஊர்வன எனப்பட்டன.[6]
சமூகப் படிமலர்ச்சியைப் பொறுத்தவரையில், சமூக அமைப்புகளையும் அவற்றினுடைய சிக்கல்தன்மை, தகவமைப்பு, ஒருங்கமைப்பு, இடையிணைப்பு ஆகியவற்றையும் உருவாக்கும் சமூக நேர் உருமாற்றம் (social anagenesis/aromorphosis) என்பது பரந்து விரவிய பொதுச் சமூகப் புத்தாக்கமே என முன்மொழியப்படுகிறது.[7]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Yarczower & Hazlett 1977
- ↑ Gutman & Altava 2008
- ↑ Kimbel et al. 2006
- ↑ கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) resource on understanding evolution defines a lineage as "A continuous line of descent; a series of organisms, populations, cells, or genes connected by ancestor/descendent relationships." Understanding Evolution, Glossary of Terms
- ↑ Oxford English Dictionary defines biological lineage as "a sequence of species each of which is considered to have evolved from its predecessor."OED definition of lineage பரணிடப்பட்டது 2008-10-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ereshefsky, M. (2001), "Philosophy of Biological Classification", Encyclopedia of Life Sciences, Wiley-Blackwell, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/npg.els.0003447, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470016175
- ↑ Leonid Grinin & Andrey Korotayev. Social Macroevolution: Growth of the World System Integrity and a System of Phase Transitions. World Futures, Volume 65, Issue 7 October 2009 , pages 477 - 506; Aromorphoses in Biological аnd Social Evolution: Some General Rules for Biological and Social Forms of Macroevolution in Social Evolution & History (Vol. 8 No. 2, September 2009: 6-50).