வளையபுரோப்பனால்

வளைய புரோப்பைல் தொகுதி ஒன்றுடன் ஓர் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டுள்ள கரிமச் சேர்மம்

வளையபுரோப்பனால் (Cyclopropanol) என்பது C3H6O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைக்ளோபுரோப்பனால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் வளைய புரோப்பைல் தொகுதி ஒன்றுடன் ஓர் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டுள்ளது. மூன்று வளையங்களைக் கொண்டிருப்பதால் இச்சேர்மம் நிலைத்தன்மையற்றதாக உள்ளது. மேலும், வளையத்தை திறக்கும் வினைகளுக்கு எளிதாக உட்படுகிறது. மறுசீரமைப்பு வினைகளில் பங்கேற்பதற்கு வளையபுரோப்பனால் மிகவும் பின்தங்கி, கட்டமைப்பு மாற்றீய வினைக்கு உள்ளாகி புரோப்பனால் சேர்மத்தைக் கொடுக்கிறது [3][4]. செயற்கை முறைகளுக்கு இப்பண்பு பெரிதும் உதவுகிறது. புரோப்பனாலின் ஓரினயீனோலேட்டுக்கான சிந்தோனாக வளையபுரோப்பனாலை பயன்படுத்த இயலும். எசுத்தர், சல்பேட்டு மற்றும் அமீன் இணைப்புகளுடன் ஒரு வளைய புரோப்பைலை அறிமுகப்படுத்தும் பயனுள்ள வினையாக்கியாகவும் வளையபுரோப்பனால் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக உருவாகும் சைக்ளோபுரோப்பைலுடன் கூடிய சேர்மங்கள் திறனுள்ள வைரசு எதிர்ப்பு மருந்துகளாகவும் [5], புரதக் கடத்திகளை பண்பேற்றவும் பயன்படுகின்றன [6].

வளையபுரோப்பனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோபுரோபனால்
வேறு பெயர்கள்
வளையபுரோப்பைல் ஆல்ககால், ஐதராக்சிவளையபுரோப்பேன்
இனங்காட்டிகள்
16545-68-9 Y
ChemSpider 109961 Y
InChI
  • InChI=1S/C3H6O/c4-3-1-2-3/h3-4H,1-2H2 Y
    Key: YOXHCYXIAVIFCZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123361
SMILES
  • OC1CC1
பண்புகள்
C3H6O
வாய்ப்பாட்டு எடை 58.08 g·mol−1
அடர்த்தி 0.917 g/mL[1]
கொதிநிலை 101 முதல் 102 °C (214 முதல் 216 °F; 374 முதல் 375 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Roberts, J. D.; Chambers, V. C. (1951). "Small-Ring Compounds. VI. Cyclopropanol, Cyclopropyl Bromide and Cyclopropylamine". J. Am. Chem. Soc. 73 (7): 3176–3179. doi:10.1021/ja01151a053. 
  2. Jongejan, J. A.; Duine, J. A. (1987). "Enzymatic hydrolysis of cyclopropyl acetate. A facile method for medium- and large-scale preparations of cyclopropanol". Tetrahedron Lett. 28 (24): 2767–2768. doi:10.1016/S0040-4039(00)96204-X. https://archive.org/details/sim_tetrahedron-letters_1987_28_24/page/2767. 
  3. Magrane, J. K.; Cottle, D. L. (1942). "The Reaction of Epichlorohydrin with the Grignard Reagent". J. Am. Chem. Soc. 64 (3): 484–487. doi:10.1021/ja01255a004. 
  4. Stahl, G. W.; Cottle, D. L. (1943). "The Reaction of Epichlorohydrin with the Grignard Reagent. Some Derivatives of Cyclopropanol". J. Am. Chem. Soc. 65 (9): 1782–1783. doi:10.1021/ja01249a507. 
  5. WO application 2009005677, Cottell, J. J.; Link, J. O. Schroeder, S. D.; Taylor, J.; Tse, W.; Vivian, R. W.; Yang, Z.-Y., "Antiviral compounds", published 2009-01-08 
  6. WO application 2009062118, Bulawa, C. E.; Devit, M.; Elbaum, D., "Modulators of protein trafficking", published 2009-05-14 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபுரோப்பனால்&oldid=3682281" இலிருந்து மீள்விக்கப்பட்டது