வழிவூர் முத்துவீர் பிள்ளை

வழிவூர் முத்துவீர் பிள்ளை (1888 – 1923) தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

தொகு

முத்துவீர் பிள்ளை, மாயூரத்துக்கு அருகிலுள்ள வழிவூர் எனும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர்: தவிற் கலைஞர் பொன்னுசுவாமி பிள்ளை – பொன்னம்மாள். கஞ்சனூர் சொக்கலிங்கம் பிள்ளை என்பவரிடம் தனது எட்டாவது வயது முதல் ஏழாண்டுகள் தவில் கற்றுக் கொண்டார்.

இசை வாழ்க்கை

தொகு

நாகூர் சுப்பையா பிள்ளையின் குழுவில் நிரந்தர தவில்காரராக இருந்தார். டி. என். ராஜரத்தினம் பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை, உறையூர் கோபாலசுவாமிப் பிள்ளை, மதுரை பொன்னுசுவாமிப் பிள்ளை ஆகியோருக்கு முத்துவீர் தவில் வாசித்துள்ளார்.

தவில் வாசிப்பதற்கு 'கூடு' எனும் சாதனத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் வழிவூர் முத்துவீர் பிள்ளை ஆவார்.

மறைவு

தொகு

வழிவூர் முத்துவீர் பிள்ளை, 1923ஆம் ஆண்டு தனது 36ஆவது வயதில் காலமானார்.

உசாத்துணை

தொகு