வழுதூர் (Valuthoor) அல்லது வல்லாத்தூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய பஞ்சாயத்துக் கிராமமாகும். இது தஞ்சாவூர் நகரத்திலிருந்து18 கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தக் கிராமத்தின் வழியாக குடமுருட்டி ஆறு செல்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1222 குடும்பங்களில் 5161 மக்கள் வசித்தனர்.[1]

வழுதூர்
கிராமம்
வழுதூர் is located in தமிழ் நாடு
வழுதூர்
வழுதூர்
தமிழ்நாட்டில் அமைவிடம்
வழுதூர் is located in இந்தியா
வழுதூர்
வழுதூர்
வழுதூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°55′05″N 79°13′15″E / 10.91804°N 79.22094°E / 10.91804; 79.22094
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)தஞ்சாவூர் மாவட்டம்
வட்டம் (தாலுகா)பாபநாசம் வட்டம்
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அருகிலுள்ள நகரம்தஞ்சாவூர் & கும்பகோணம்
இணையதளம்valoothoor.com

புவியியல்

தொகு

வழுதூர் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஆகும்.

கல்வி

தொகு

பள்ளிகள்

தொகு
  • சௌகத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி (அரசு உதவி பெறும்), பிரதான சாலை, வழுதூர்.
  • அலிப் மெட்ரிகுலேஷன் பள்ளி, உமர் தெரு, வழுதூர்.

கல்லூரி

தொகு

பல்தொழில்நுட்பக் கல்லூரி

தொகு
  • அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி - ரெகுநாதபுரம் - வழுதூர் - 614210 - பாபநாசம் தாலுக்கா.

தொடருந்து நிலையம்

தொகு

வழுதூருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகும். இது வழுதூரிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.

காவல் நிலையம்

தொகு

வழுதூர் அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசியல்

தொகு

மக்களவைத் தொகுதி

தொகு

வழுதூர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாடு மாநிலத் தொகுதி

தொகு

வழுதூர் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "District Census Hand Book - Village Release". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுதூர்&oldid=4105022" இலிருந்து மீள்விக்கப்பட்டது