வழெங்கடா குஞ்சு நாயர்

வழெங்கடா குஞ்சு நாயர் (Vazhenkada Kunchu Nair) (1909-1981) 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த கதகளி நிபுணர்களில் ஒருவர். இவர், சிறந்த கலைஞராகவும், குருவாகவும், சமசுகிருத அறிஞராகவும் இருந்தார். இவர் முக்கியமாக கேரளாவின் கதகளியின் இரண்டு பெரிய நிறுவனங்களில் குருவாக பணியாற்றினார்.

தொழில் தொகு

முதலில் கோட்டக்கல் பி.எஸ்.வி. நாட்டியச் சங்கத்திலும், 1946 முதல் 1960 முதல் 1972 வரை கேரள கலாமண்டலத்திலும் பணியாற்றினார். தென்னிந்தியாவின் கேரளாவின் முதன்மையான கலை நிறுவனமான காலமண்டலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தார் [1] இவருக்கு பத்மசிறீ விருதும், சங்கீத நாடக அகாதமி விருதும்[2] வழங்கப்பட்டுள்ளது. இவர் புகழ்பெற்ற பட்டிக்கம்தோடி இராவுன்னி மேனனின் முன்னணி சீடராக இருந்தார். மேலும் நளன், ருக்மாங்கதன், தருமன், வீமன், அருச்சுனன், பிராமணன் (சந்தானகோபாலம்), பரசுராமன் (சீதா சுயம்வரம்), எதிர் நாயகன்களாக இராவணன் , துரியோதனன் போன்ற வேடங்களையும் ஏற்று நடித்தார். [3]

சீடர்கள் தொகு

மலப்புறம் மாவட்டத்தில் வழெங்கடா என்ற ஊரில் கதகளியின் குருக்களான கரியாட்டில் கொப்பன் நாயர், கல்லுவாழி கோவிந்த பிஷரோடி ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இதையடுத்து, இவர் பட்டிக்கம்தோடியின் சீடரானார். கோட்டக்கல் பி.எஸ்.வி நாட்டியச் சங்கத்தில் ஆசிரியராக இருந்தபோது, சிஆர் ராமன் நம்பூதிரி,கோட்டக்கல் கிருட்டிணன்குட்டி நாயர், கோட்டக்கல் அப்பு நாயர், கோட்டக்கல் சிவராமன், கோட்டக்கல் கோபி நாயர், மங்கத் நாராயணன் நாயர், ராகவன் நாயர், கேகே நாராயணன்குட்டி பணிக்கர், சங்கரநாராயணன் எம்ப்ராந்திரி கோட்டக்கல் குட்டி கிருஷ்ணன், நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரி, கோட்டக்கல் சம்பு எம்ப்ரந்திரி, கலாமண்டலம் வாசு பிஷாரடி, இ.வாசுதேவன் நாயர் மற்றும் கோட்டக்கல் சந்திரசேகரன் போன்றவர்கள் இவரிடம் பயின்ற ஒரு சிலர். கேரள கலாமண்டலத்தின் முன்னாள் முதல்வரான வழெங்கடா விஜயன் இவரது மகனாவார்.

இறப்பு தொகு

நீண்ட கால உடல்நலக்குறைவால் 1981 பிப்ரவரி 19 அன்று இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.remashrikant-ecpa.com/[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
  3. Kathakali Encyclopedia (Vijnanakosam), page 319
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழெங்கடா_குஞ்சு_நாயர்&oldid=3228129" இலிருந்து மீள்விக்கப்பட்டது