வாக்கரனா பிரினோடெர்மா

வாக்கரனா பிரினோடெர்மா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
வாக்கரனா
இனம்:
வா. பிரினோடெர்மா
இருசொற் பெயரீடு
வாக்கரனா பிரினோடெர்மா
(பெளலஞ்சர், 1882)
வேறு பெயர்கள்
  • இராணா பிரினோடெர்மா பெளலஞ்சர், 1882
  • இந்திரானா பிரினோடெர்மா பெளலஞ்சர், 1882

வாக்கரனா பிரினோடெர்மா (Walkerana phrynoderma) என்பது தென்னிந்தியாவில் உள்ள கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆனைமலை மலையில் காணப்படும் தவளை சிற்றினமாகும். மூணாறு, எரவிகுளம் தேசிய பூங்கா, வால்பாறை தேயிலைத் தோட்டங்கள், ஆனைமலை புலிகள் காப்பகம், புல் மலைகள் தேசிய பூங்கா மற்றும் பழனி மலைகளில் இந்த சிற்றினம் காணப்படுவது அறியப்படுகிறது.[2] இது வெப்பமண்டல ஈரமான காடுகளில் இலைக் குப்பைகளுடன் தொடர்புடைய மிகவும் அரிதான நிலப்பரப்பு வாழ்த் தவளைச் சிற்றினமாகும். வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதிகளில் மரங்களை விறகுகளாகச் சேகரிப்பவர்களால் ஏற்படும் வாழ்விட இழப்பால் இது அச்சுறுத்தப்படுகிறது. இது "முதல் 100 பரிணாம ரீதியாக வேறுபட்ட மற்றும் உலகளவில் அழியும் நிலையில் உள்ள நீர்நில வாழ்வனவற்றில்" ஒன்றாக உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. S.D. Biju; S.P. Vijayakumar; Sushil Dutta (2004). "Indirana phrynoderma". IUCN Red List of Threatened Species 2004: e.T58314A11763836. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58314A11763836.en. https://www.iucnredlist.org/species/58314/11763836. 
  2. {{cite web}}: Empty citation (help)
  3. Kanagavel, A.; S. Parvathy; A. P. Chundakatil; N. Dahanukar; B. Tapley (2018-12-31). "Distribution and habitat associations of the Critically Endangered frog Walkerana phrynoderma (Anura: Ranixalidae), with an assessment of potential threats, abundance, and morphology.". Phyllomedusa. Belo Horizonte 17: 21–37. doi:10.11606/issn.2316-9079.v17i1p21-37. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கரனா_பிரினோடெர்மா&oldid=3837278" இலிருந்து மீள்விக்கப்பட்டது