வாக்களிக்கக் கையூட்டு விவகாரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வாக்களிக்க கையூட்டு (Notes-for-vote அல்லது cash-for-votes scandal) என்பது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சூலை 22, 2008 அன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் தலைமையிலான பெரும்பான்மை கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, பா.ஜனதா கட்சி உறுப்பினர்களுக்கு பணம் வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினைக் குறிக்கும். இந்திய அரசு இந்திய அமெரிக்க அணுவாற்றல் உடன்பாட்டின்படி பன்னாட்டு அணுசக்தி முகமையை நாடியதை எதிர்த்து இந்தக் கூட்டணி அரசிற்கு அமைச்சரவையில் பங்கேற்காது வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த மார்க்சிய பொதுவுடமைக் கட்சித் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியதாயிருந்தது.
குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும்
தொகுகுற்றச்சாட்டுகள்
தொகுபணம் வழங்கப்பட்ட அசோக் அர்கல், பகன் சிங் குலஸ்தே மற்றும் மகாவீர் பகோரா என்ற மூன்று பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கத்தை கத்தையாக ₹ 3 கோடி (715,000 அமெரிக்க டாலர்கள்) பணத்தை நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு புது தில்லி காவல் துறை ஆணையரை வேண்டினார்.[1]
ஆட்சியைத் தக்கவைக்க அரசு கையூட்டுக்கள் கொடுத்ததாக குற்றம் சுமத்திய பா.ஜ.க இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியது. [2].
ஆதாரங்கள்
தொகுஇதற்கான ஆதாரங்களாக பா.ஜ.க காணொளி நாடாக்களை புதிய "ஆவணபூர்வ சாட்சியங்களாக" வழங்கியது[3]. மேலும் தொலைக்காட்சி செய்தியூடகம் சிஎன்என்-ஐபிஎன் இந்த காணொளிகளை ஒளிபரப்பாததையும் கண்டிதது[3].இந்த ஒளி நாடாக்களை அவைத்தலைவர் கைப்பற்றி ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தினார்.[4]. ஆகத்து 12, 2008 அன்று இந்த நாடாக்கள் ஒளிபரப்பப்பட்டன.[5].
இந்தக் குழு திசம்பர் 15, 2008 அன்று மக்களவையில் வெளியிட்ட தனது அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர் சிங் மற்றும் அகமது படேல் இருவரும் குற்றமற்றவர்கள் என குறிப்பிட்டது.[6]
உச்சநீதிமன்ற இடையீடு
தொகுஇந்நிலையில் 2011ஆம் ஆண்டுவரை இந்த வழக்கில் காவல்துறை மந்தமாக செயல்படுவதாக அண்மையில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு,தற்போதைய செயல்பாடு அறிக்கையை கேட்டிருந்தது. இதனையடுத்து தில்லி காவல்துறை அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா மற்றும் பா.ஜ.க உறுப்பினர்களுக்கும் அமர்சிங்கிற்குமிடையே தரகராக செயலாற்றிய சுகைல் இந்துஸ்தானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் அமர்சிங்கிடம் விசாரணை நடத்தப்படுகிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "afp.google.com, Indian PM celebrates vote win, says millions will benefit". Archived from the original on 2008-07-31. பார்க்கப்பட்ட நாள் 2008-07-31.
- ↑ AFP, Jul 22, 2008, 05.50pm IST (2008-07-22). "BJP demands PM's resignation over cash-for-vote scam - The Times of India". Timesofindia.indiatimes.com. Archived from the original on 2008-07-25. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ 3.0 3.1 "BJP offers new 'evidence' in cash-for-vote scandal". gulfnews. 2008-08-03. Archived from the original on 2008-11-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
- ↑ http://www.livemint.com/2008/08/04231542/Cashforvotes-scandal-tapes-m.html?d=1
- ↑ "Truth that stings: Cash-for-vote tapes now in the open - India News - IBNLive". Ibnlive.in.com. 2010-02-03. Archived from the original on 2012-10-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
- ↑ Parl panel exonerates Amar Singh in cash-for-votes scam. Retrieved 16 September 2010.
- ↑ எம்.பி.க்களுக்கு லஞ்சம்: அமர்சிங்கிடம் காவல்துறையினர் விசாரணை