வாசுதேவன் (சகமான வம்சம்)
வாசுதேவன் (Vasudeva) (கி.பி. 6 ஆம் நூற்றாண்டு) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர், வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.
வாசுதேவன் | |
---|---|
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | பொது ஊழி 551 - 684 |
பின்னையவர் | சமந்தராஜன் |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
வம்சத்தின் நிறுவனர் சகமானன் என அறியப்பட்டாலும், வாசுதேவன் வம்சத்தின் ஆரம்பகால ஆட்சியாளராக அறியப்படுகிறார். 14 ஆம் நூற்றாண்டின் சமண அறிஞரான இராஜசேகர சூரியின் பிரபந்த கோஷம் என்ற நூலின்படி, வாசுதேவன் கிபி 551 இல் (608 விக்ரம் நாட்காட்டி ) அரியணை ஏறினார். இந்த அறிக்கையின் வரலாற்று துல்லியம் உறுதியாக இல்லை. [1]
பிருத்விராஜ விஜயம் என்ற நூலில் உள்ள ஒரு புராணக் கணக்கு, ஒரு வித்யாதரிடமிருந்து (ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம்) பரிசாக சாம்பர் உப்பு ஏரியை வாசுதேவன் பெற்றதாகக் கூறுகிறது.[2] இவரது வழித்தோன்றலான சோமேசுவரரின் பிஜோலியா கல்வெட்டு, ஏரி வாசுதேவனால் உருவானது என்று கூறுகிறது. [1]
அடுத்த அறியப்பட்ட சகாமான அரசர் சமந்தராஜன் என்பவராவார். அவருக்கும் வாசுதேவனுக்கும் உள்ள தொடர்பு கிடைக்கக்கூடிய வரலாற்றுப் பதிவுகளில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை. [3]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Dasharatha Sharma 1959, ப. 23.
- ↑ R. B. Singh 1964, ப. 84.
- ↑ R. B. Singh 1964, ப. 85.
உசாத்துணை
தொகு- Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.