பிரபந்த கோஷம்

சமசுகிருத மொழித் தொகுப்பு

பிரபந்த-கோஷம்' ( Prabandha Kosha) என்பது சமசுகிருத மொழித் தொகுப்பாகும். இது கிபி 1349 இல் சைன அறிஞரான இராஜசேகர சூரி என்பவரால் தொகுக்கப்பட்டது. [1] [2] இது 10 சமண அறிஞர்கள், 4 சமசுகிருத கவிஞர்கள், 7 மன்னர்கள் மற்றும் 3 சமண அரசவையினர்கள் உட்பட 24 பேரின் வாழ்க்கையை விவரிக்கிறது. [3] இது "சதுர்விஞ்சதி பிரபந்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. [4]

பிரபந்த கோஷம்
நூலாசிரியர்இராஜசேகர சூரி
நாடுஇந்தியா
மொழிசமசுகிருதம்
பொருண்மைஅறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு
வகைபிரபந்தம்
வெளியிடப்பட்ட நாள்
1349 பொது ஊழி

இத்தொகுப்பின் உள்ளடக்கத்தை இராஜசேகரன் தனது ஆசிரியர் திலகசூரியிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் அமைந்துள்ளது. மதனசிம்மனின் ஆதரவின் கீழ் தில்லியில் அவர் படைப்பை இயற்றினார். அவருடைய தந்தை முகமது சாகியால் (அநேகமாக முகம்மது பின் துக்ளக் ) கௌரவிக்கப்பட்டார். [5]

தொகுப்பில் 7வது பிரபந்தம் மட்டுமே ( மல்லவாடி -சூரி பற்றியது) முழுவதுமாக வசன வடிவில் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ள பிரபந்தங்கள் பேச்சுவழக்கு சமசுகிருத உரைநடையைப் பயன்படுத்துகின்றன. [4]

பிரபந்தகோஷத்தின் 24 பிரபந்தங்கள் (கதைகள்), பின்வரும் நபர்கள் மீது 4,300 சுலோகங்கள் (வசனம்) உள்ளன: [6]

சைன அறிஞர்கள்

தொகு
ஹேமச்சந்திரன்
  1. பத்ரபாகு மற்றும் வராகமிகிரர்
  2. ஆர்யநந்திலன்
  3. ஜீவதேவன்-சூரி
  4. ஆரியகபட ஆச்சார்யர்
  5. பாடலிப்தாச்சார்யர்
  6. சித்தசேன -சூரி மற்றும் விருத்தாவதி
  7. மல்லவாடி-சூரி
  8. ஹரிபத்ர -சூரி
  9. பாப்பாபட்டி-சூரி
  10. ஹேமச்சந்திரன்

கவிஞர்கள்

தொகு
  1. ஸ்ரீஹர்ஷர்
  2. ஹரிஹரன்
  3. அமரச்சந்திரன்
  4. மதனகீர்த்தி
  1. சாலிவாகனன்
  2. வாங்கச்சுல
  3. விக்ரமாதித்தியன்
  4. நாகார்ஜுனா
  5. உதயணன்
  6. இலட்சுமண சேனா
  7. மதனவர்மன்

அரசவையினர்

தொகு
  1. ரத்னா-சிரவகன்
  2. அபாதா-சிரவகன்
  3. வாஸ்துபாலன் மற்றும் தேஜபாலன்

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபந்த_கோஷம்&oldid=3453148" இலிருந்து மீள்விக்கப்பட்டது