வாசெக்டமி
வாசெக்டமி (Vasectomy) என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும்.
வாசெக்டமி Vasectomy | |
---|---|
பின்புலம் | |
வகை | Sterilization |
முதல் பயன்பாடு | 1899 (1785 முதல் சோதனைகள்)[1] |
தோல்வி விகிதங்கள் (முதல் ஆண்டு) | |
சரியான பயன்பாடு | 0.10%[2] |
வழக்கமான பயன்பாடு | 0.15%[2] "வாஸ்-கிளிப்" கிட்டத்தட்ட 1% |
பயன்பாடு | |
கால விளைவு | நிரந்தரமானது |
மீள்தன்மை | சாத்தியம் |
பயனர் நினைவூட்டல்கள் | விந்தணு இல்லை என்பதைச் சரிபார்க்க இரண்டு தொடர்ச்சியான எதிர்மறை விந்து மாதிரிகள் தேவை. |
மருத்துவ ஆய்வு | அனைத்து |
நன்மை மற்றும் தீமை | |
பால்வினை நோய் தடுப்பு | இல்லை |
நன்மைகள் | பொது Tubal ligation தேவையில்லை. பெண்களுக்கான டியூபல் லிகேஷனை விட குறைவான செலவு மற்றும் குறைவான சிரமங்கள். |
அபாயங்கள் | விரைகளின் தற்காலிக (உறுப்பு) வீக்கம், நீண்ட கால பிறப்புறுப்பு வலி. |
இது ஆண்களுக்கான கருத்தடைச் சிகிச்சை அல்லது குடும்ப நல அறுவைச் சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.
குறிப்பாகப் பெண்களுக்கானக் கருத்தடை அறுவைச சிகிச்சையை விட இது மிக எளிமையானது.
சிகிச்சை முறை
தொகுபொதுவாக இந்த எளிய பாதுகாப்பான சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவை இல்லை, குறிப்பிட்ட பகுதியை உணர்விழக்கச் செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. தையலோ தழும்போ இல்லை.
மருத்துவமனையில் தங்க வேண்டியத் தேவை இல்லை. புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டு, சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் செய்யும் சாதாரண வேலைகளைத் தொடரலாம்.
பக்க விளைவுகள்
தொகுபொதுவாக எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Popenoe P (1934). "The progress of eugenic sterilization". Journal of Heredity 25 (1): 19. http://www.eugenicsarchive.org/html/eugenics/static/images/2287.html.
- ↑ 2.0 2.1 Trussell, James (2011). "Contraceptive efficacy". In Hatcher, Robert A.; Trussell, James; Nelson, Anita L.; Cates, Willard Jr.; Kowal, Deborah; Policar, Michael S. (eds.). Contraceptive technology (20th revised ed.). New York: Ardent Media. pp. 779–863. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59708-004-0. பன்னாட்டுத் தர தொடர் எண் 0091-9721. இணையக் கணினி நூலக மைய எண் 781956734. Table 26–1 = Table 3–2 Percentage of women experiencing an unintended pregnancy during the first year of typical use and the first year of perfect use of contraception, and the percentage continuing use at the end of the first year. United States.
வெளி இணைப்புகள்
தொகு- ஆண்களுக்கான "வாசக்டமி' விழிப்புணர்வு நிகழ்ச்சி
- அக். 27-ல் ஆண்களுக்கான வாசக்டமி முகாம்
- ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம்[தொடர்பிழந்த இணைப்பு]
- அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
- ஆண் கருத்தடை சிகிச்சைக்கு ஊக்கத் தொகை ரூ.1,100-ஆக அதிகரிப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- MedlinePlus Encyclopedia
- How to treat: vasectomy and reversal, Australian Doctor, 2 July 2014 பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2020 at the வந்தவழி இயந்திரம்