வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட்

கசராத்தின், ராஜ்கோட்டில் அமைந்துள்ள அருங்காட்சியகம்

வாட்சன் அருங்காட்சியகம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிர (பிராந்தியம்) பகுதியில் அமைந்துள்ள, குஜராத் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இதுபோன்ற ஏழு அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜடேஜா ராஜ்புத்திரர்களால் நிறுவப்பட்ட ராஜ்கோட் மாநிலத்தைச் சேர்ந்த விலை மதிப்பற்ற பொருட்களின் சேகரிப்பை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இங்கு விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள், புகைப்படங்கள், ஒரு குறிப்பு நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகியவை உள்ளன. வெளியீடுகள் இங்கு விற்கப்படுகின்றன.

வாட்சன் அருங்காட்சியகம்
Map
நிறுவப்பட்டது1888
அமைவிடம்ஜுபிளி கார்டன், ராஜ்கோட்
ஆள்கூற்று22°18′02″N 70°48′06″E / 22.300532°N 70.801762°E / 22.300532; 70.801762
வகைபல்நோக்கு [1]
வருனர்களின் எண்ணிக்கை78,000 (2007-2008)
மேற்பார்வையாளர்எஸ்.எம்.டலால்

வரலாறு

தொகு

ராஜ்கோட்டின் ஜூபிலி கார்டனில் அமைந்துள்ள ராணி விக்டோரியா நினைவு நிறுவன கட்டிடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டு முதல் 1889 ஆம் ஆண்டு வரை கத்தியாவார் ஏஜென்சியின் பிரித்தானிய அரசியல் முகவராக இருந்த கர்னல் ஜான் வாட்சனின் நினைவாக, இந்த அருங்காட்சியகத்திற்கு 1888இல் அவரது பெயர் சூட்டப்பட்டது. வாட்சன் அருங்காட்சியகம் குஜராத்தில் பரோடா அருங்காட்சியகத்திற்குப் பிறகு இரண்டாவது மிக முக்கியமான அருங்காட்சியகமாகும், இது சௌராஷ்டிரா பகுதியின் மிகப் பழமையான அருங்காட்சியக இது கருதப்படுகிறது. கர்னல் வாட்சன் வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார், ராஜ்கோட்டைப் பற்றிய பல தகவல்களை அவர் சேகரித்து வந்துள்ளார். அவரது பெரும்பாலான சேகரிப்புகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக கட்டிடம் 1893 இல் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், பம்பாய் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்த லார்ட் ஜார்ஜ் ஹாரிஸ் என்பவரால் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்துவிடப்பட்டது.[2]

மொஹன்ஜதாரோவில் இருந்து கொணரப்பட்ட கலைப்பொருள்களின் பிரதிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்இயற்கை வரலாறு, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்கள், கோவில் சிலைகள், ஆடை வகைகள் மற்றும் உள்ளூர் பழங்குடி மக்களின் வீடுகளின் வடிவமைப்புகள். வாட்சன் அருங்காட்சியகத்தில் பாரம்பரிய, தொல்பொருள்கள் மற்றும் நாணயங்களின் சிறந்த தொகுப்பும் இந்த அருங்காட்சியில் உள்ளது.

அருங்காட்சியகத்தின் தொல்பொருள் காட்சிக்கூடத்தில் வரலாற்று காலத்திற்குகு முந்தைய காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள் உள்ளன. மேலும் தொல்பொருள் காட்சிக்கூடத்தில் ஹரப்பன் நாகரிகம் நாகரிகம் சேர்ந்த பொருள்கள் உள்ளன. ஜெத்வாவின் ஒரு தலைநகரான, முந்தைய குமாலிக்குச் சொந்தமான அரிய சிற்பங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிரிவுகள்

தொகு
 
விக்டோரியா மகாராணியின் சிலை, 1897 இல் கெட்ல்ஸ்டனின் லார்ட் கர்சன் அவர்களால் திறக்கப்பட்டது
  • சிற்பங்கள்
  • ஓவியங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள்
  • ஜவுளி
  • கல்வெட்டு
  • நாணயங்கள் [3]
  • மானிடவியல்
  • நாட்டுப்புற எம்பிராய்டரி
  • கைவினை
  • இசை கருவிகள்
  • மர வேலை
  • இயற்கை வரலாறு
  • பாறைகள் மற்றும் தாதுக்கள்

ஆண்டு நிகழ்வுகள்

தொகு

பாரதிய ஷில்ப் சம்ருத்தி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுகின்ற ஒரு வார விழாவாகும்.

பார்வையாளர் நேரம்

தொகு

வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப்பொருட்கள், சிற்பங்கள், மானுடவியல், நாட்டுப்புற எம்பிராய்டரி, கைவினைப்பொருட்கள், இசைக்கருவிகள் போன்றவை உள்ள இந்த அருங்காட்சியகம் தேபர் சாலை, லோகனா பரா, ராஜ்கோட், குஜராத் 360007 என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை காலை 9:00 மணி முதல் 12:45 மணி வரையிலும் மற்றும் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் பார்வையிடலாம். புதன்கிழமையும், 2 மற்றும் 4 சனிக்கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும். குஜராத் மாநிலத்தில் இந்த அருங்காட்சியகம் தவிர காலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ், சர்தார் படேல் அருங்காட்சியகம், காத்தாடி அருங்காட்சியகம், பரோடா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம், கட்ச் அருங்காட்சியகம், லகோட்டா அருங்காட்சியகம், மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம்,தர்பார் ஹால் அருங்காட்சியகம், ஸ்ரேயாஸ் நாட்டுப்புற அருங்காட்சியகம், ரோட்டரி மிட் டவுன் டால்ஸ் மியூசியம், உலக விண்டேஜ் கார் அருங்காட்சியகம், விசாலாவில் வேச்சார் - ஒரு பாத்திர அருங்காட்சியகம், காந்தி ஸ்மாரக் சங்கராலயா போன்ற அருங்காட்சியகங்களும் உள்ளன.[4]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு