வான்வெளியில் தலைமுனையம்
வான்வெளியில் தலைமுனையம் (Headend in the Sky, HITS) அல்லது ஹிட்ஸ் என்ற அமைப்பு அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனமான காம்காசுட்டு நிறுவனம் வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் கலப்புச் சேவையாகும். இந்தக் கலப்பு அலைவரிசைகள் கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. பல்வேறு செயற்கைக்கோள்களில் கிடைக்கப்பெறும் தொலைக்காட்சி அலைவரிசைகளை கலந்து ஒரே தொகுப்பாக எண்ணிம வடிவத்தில் இவை வழங்கப்படுகின்றன. 1994ஆம் ஆண்டு இதனை முதலாக அமெரிக்க நிறுவனம் டிசிஐ துவக்கியது. பின்னர் 2002இல் இது காம்காசுட்டு நிறுவனம் கைக்கு வந்தது. இதன் தலைமையகம் கொலராடோவில் சென்டென்னியலில் உள்ள காம்காசுட்டு மீடியா சென்டரில் அமைந்துள்ளது. 2010 நிலவரப்படி, ஹிட்சு 280 எண்ணிம சுருக்கிய ஒளித மற்றும் ஒலித தொலைக்காட்சி குறிப்பலைகளை அமெரிக்காவெங்கும் 2000க்கும் மேற்பட்ட கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களுக்கு வழங்குகிறது.[1]
இத்தகைய சேவையை வழங்க இந்திய அரசு 2009ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று அனுமதி அளித்துள்ளது. இதனால் உள்ளூர் கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களுக்கு எண்ணிம வடிவத்திற்கு மாற செலவு குறைகிறது. அவர்களுக்கான தலைமுனையச் செலவுகளும் வெகுவாக குறைகின்றன. ஒரு செயற்கைக்கோளை நோக்கினால் போதுமானது.
பயன்கள்
தொகு- தலைமுனையச் செலவுகள் குறைக்கப்படுகின்றன.
- காண்திரை பிரிதிறன் கூடிய எண்ணிம வடிவத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் வழங்கப்படுவதால் பயனர்களுக்கு தெளிவான தொலைக்காட்சி கிடைக்கிறது.
- எண்ணிம வடிவத்தில் இயங்குவதால் கூடுதலான அலைவரிசைகளை கொடுக்கப்பட்ட அலைக்கற்றையில் ஏற்ற முடிகிறது. பயனர்களுக்கு கூடுதல் அலைவரிசைகள் கிடைக்கின்றன.
- நாடெங்கிலும் பரவியபிறகு பெருமளவுப் பயன்பாட்டால் தொலைக்காட்சி அணுக்கப் பெட்டிகளின் விலை குறையும்.
- நாடெங்கும் ஒரே அணுக்கப் பெட்டியை அனைத்து கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களும் பயன்படுத்துவதால் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பணியிட மாற்றம் பெறுவோருக்கு வசதியாக இருக்கும்.
சான்றுகோள்கள்
தொகு- ↑ [1] பரணிடப்பட்டது 2010-05-24 at the வந்தவழி இயந்திரம் About Comcast Media Center
வெளி இணைப்புகள்
தொகு- Comcast Media Center பரணிடப்பட்டது 2012-10-17 at the வந்தவழி இயந்திரம் — official website