தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி
தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி (set-top box, STB; set-top unit, STU) தொலைக்காட்சிப் பெட்டிக்கு வெளியே (அண்மைக்காலம் வரை தொலைக்காட்சிப் பெட்டியின் மேற்புறம்) வைக்கப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டியையும் அதற்கு குறிகை தரும் தகவல் ஊடகத்தையும் இணைக்கின்ற ஓர் மின்னணுக் கருவியாகும். இதன் அதிர்வு இயைவு பகுதியில் ஊடகத்திலிருந்துப் பெறப்படும் குறிப்பலைகளை தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றும் வடிவத்திற்கு மாற்றப்படுவதுடன் முன்னரே ஏற்பட்ட உடன்பாட்டிற்கேற்ப தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அணுக்கம் வழங்கவும் வசதிகள் உள்ளன. கம்பிவடத் தொலைக்காட்சி கட்டுடைய அணுக்க முறைமையிலும் செய்மதித் தொலைக்காட்சி அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் கம்பிவடத் தொலைக்காட்சி பிணையச் சட்டம், 1995 (Cable Television Network Act (1995))யின்படி தொலைக்காட்சிக் குறிப்பலைகள் எண்ணிம வடிவத்திற்கு படிப்படியாக மாற்றியமைக்கப்படுகின்றன[1]. முதற்கட்டமாக சென்னை, மும்பை, தில்லி மற்றும் கொல்கத்தாவில் எண்ணிமத் தொலைக்காட்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைகளைப் பெற தொலைக்காட்சி அணுக்கப் பெட்டிகள் தேவைப்படுகின்றன[2]. இவற்றின் பற்றாக்குறையால் அலைமருவி தொலைக்காட்சிச் சேவை நிறுத்தப்படுவது தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சான்றுகோள்கள்
- ↑ "CAS rollout in 57 cities in 4 years". ரீடிஃப் வலைத்தளம். சூன் 12, 2007. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2013.
- ↑ "CAS rollout encouraging, DTH numbers good: TRAI". மணிகண்ட்ரோல் வலைத்தளச் செய்தி. சனவரி 3, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2013.
வெளி இணைப்புகள்
- Digital TV Consumer test reports UK Government-funded website to support Digital Switchover