வாரணாசி நகரத் தொடருந்து நிலையம்

வாராணசி நகரத் தொடருந்து நிலையம் (Varanasi City railway station) வாராணசியில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் 4 கி.மீ. தொலைவிலும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வடகிழக்கில் 10 கி.மீ. தொலைவிலும் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தின் தென்கிழக்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வாராணசி சந்திப்பு தொடருந்து நிலையத்தில் பயணிப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் கூடுதலாக இந்த முனையம் செயல்படுகிறது.

வாராணசி நகரத் தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்,
பொது தகவல்கள்
அமைவிடம்தே.நெ. 2 ஜெய்த்புரா, வாரணாசி, உத்தரப்பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்25°20′04″N 83°00′52″E / 25.334332°N 83.014485°E / 25.334332; 83.014485
ஏற்றம்76.7 மீட்டர் (251.7 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்வாராணசி-சாப்ரா வழித்தடம்
கோரக்பூர்-மா-பிரயாக்ராஜ் முதன்மை வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்5
தொடருந்து இயக்குபவர்கள்இந்திய இரயில்வே
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா
பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBCY
மண்டலம்(கள்) வகிதொம
கோட்டம்(கள்) வாராணசி தொடருந்து மண்டலம்
பயணக்கட்டண வலயம்வடகிழக்கு தொடருந்து மண்டலம்
அமைவிடம்
வாராணசி நகரத் தொடருந்து நிலையம் is located in Varanasi district
வாராணசி நகரத் தொடருந்து நிலையம்
வாராணசி நகரத் தொடருந்து நிலையம்
Varanasi district இல் அமைவிடம்

பயணிகள் வசதிகள்

தொகு

வாராணசி நகரத் தொடருந்து நிலையத்தில், ஐந்து நடைமேடைகள் உள்ளன, கூடுதலாக 8 நடைமேடைகளுக்கான வசதிகள் உள்ளன. நிலையத்திற்கு ஒரு நுழைவாயில் உள்ளது. வாராணசி சந்திப்பில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாண்டுவாடி ரயில் நிலையத்தையும், வாராணசி நகர ரயில் நிலையத்தையும் கூடுதல் நிலையங்களாக மேம்படுத்த இரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இப்போது, வாராணசி நகரம் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் (வாராணசி நகரப் பிரிவு) தலைமை நிலையமாகும். முன்னதாக வாராணசி சந்திப்பு வடகிழக்கு ரயில்வேயின் தலைமையகமாக இருந்தது. பின்னர் வடகிழக்கு ரயில்வே இந்த தலைமையகத்தை மாற்றியது. வாராணசி சந்திப்பு வடக்கு தொடருந்து மண்டலத்தின் கீழ் வருவதால், இலக்னோ சார்பாக் கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த நிலையம் காஜிபூர், மாவ், தர்பங்கா, சாப்ரா, மும்பை, இலக்னோ, கோரக்பூர், கான்பூர் போன்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[1][2]

வாராணசி நகரத்திலிருந்து புறப்படும் தொடருந்து வண்டிகள்

தொகு
ரயில் எண் ரயில் பெயர் புறப்படும் இடம் சேருமிடம்
15007 கிரிஷாக் எக்ஸ்பிரஸ் வாராணசி நகரம் இலக்னோ
15552 வாராணசி சிட்டி-தர்பங்கா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் வாராணசி நகரம் தர்பங்கா
55132 வாராணசி சிட்டி-சாப்ரா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வாராணசி நகரம் சப்ரா

பயணிகள் ரயில்கள் வாராணசி நகரத்திலிருந்து

தொகு
ரயில் எண் ரயில் பெயர் புறப்படும் இடம் சேருமிடம்
55014 பயணிகள் வாராணசி நகரம் சப்ரா
55120 பயணிகள் வாராணசி நகரம் கோரக்பூர்
55132 பயணிகள் வாராணசி நகரம் சப்ரா
75114 பயணிகள் (டெமு ) வாரணாசி நகரம் பட்னி
55134 பயணிகள் வாராணசி நகரம் பாலிலா
63297 பயணிகள் (மெமு ) வாரணாசி நகரம் பாலிலா
55136 பயணிகள் வாராணசி நகரம் அசாம்கார்க்
55150 பயணிகள் வாராணசி நகரம் கோரக்பூர்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு