வாரணாசி நகர தொடருந்து நிலையம்
வாரணாசி நகர தொடருந்து நிலையம் (Varanasi City railway station) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தை ஒட்டி அமைந்த 4 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு வடகிழக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவிலும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்திற்கு வடகிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு தென்கிழக்கே 23 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
வாரணாசி நகர தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
இரயில் நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஜெய்த்திபுரா, வாரணாசி, வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 25°20′04″N 83°00′52″E / 25.334332°N 83.014485°E | ||||
ஏற்றம் | 76.7 மீட்டர் (251.7 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | வாரணாசி–சப்ரா வழித்தடம்
| ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
தொடருந்து இயக்குபவர்கள் | இந்திய இரயில்வே | ||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்ஷா, பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | Standard (on-ground station) | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | BCY | ||||
மண்டலம்(கள்) | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | வாரணாசி இரயில்வே கோட்டம் | ||||
பயணக்கட்டண வலயம் | வடகிழக்கு தொடருந்து மண்டலம் | ||||
|
இந்த தொடருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள சப்ரா, பல்லியா, லக்னோ, தர்பங்கா அயோத்தி போன்ற நகரங்களுக்கு விரைவு வண்டிகளும், பயணிகள் வண்டிகளும் இயங்குகிறது. மேலும் அனைத்து இந்திய பெரிய நகரங்களுக்கு செல்லும் விரைவு வண்டிகள் இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[1]