வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் அக்டோபர் 2007
- அக்டோபர் 26 - திஸ்ஸமகாராம பகுதியில் ஆயுதம் தரித்த புலிகள் ஊடுருவியுள்ளதாக பொய்யான செய்தியொன்றை ஒலிபரப்பியதாகக் குற்றங்சாட்டி ஏபிசி வானொலிச் சேவைகள் இலங்கையில் தடை செய்யப்பட்டன.(டெயிலி மிரர்)
- அக்டோபர் 26 - வவுனியாவில் அமுக்கவெடி வெடித்ததில் 6 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயமடைந்தனர். (டெயிலி மிரர்)
- அக்டோபர் 25 - இலங்கையின் தெற்கில் திஸ்ஸமகாராமையில் இலங்கை கடற் படையினர் பயணித்த பேருந்தை புலிகளின் கரந்தடி அணியொன்று வழிமறித்து தாக்கியதில் 6 இலங்கை கடற்படையினர் கொல்லப்பட்டதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைப் படையினர் இதனை மறுத்துள்ளனர். (தமிழ்நெட்), (பிபிசி)
- அக்டோபர் 25 - மன்னார் பெரியமடுவில் இலங்கைப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் நிறைமாதக் கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- எல்லாளன் நடவடிக்கை:
- அக்டோபர் 25 - புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பெருநிலப்பரப்பில் எல்லாளன் நடவடிக்கையில் பங்கெடுத்த 21 சிறப்புக் கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழுவுகள் பல ஒழுங்குச் செய்யப்பட்டன.(புதினம்), (தமிழ்நெட்)
- அக்டோபர் 23 - இலங்கை இராணுவத்தினர் தாக்குதலில் பங்கெடுத்து கொல்லப்பட்ட 21 கரும்புலிகளது நிர்வாண உடல்களை அனுராதபுர நகரில் மக்கள் பார்வைக்காக எடுத்துச் சென்றனர்.(தமிழ்நெட்), (லங்கடீசென்ட்), (பதிவு)
- அக்டோபர் 22 - வவுனியாவில் இருந்து புறப்பட்ட பெல்-212 வகை உலங்குவானூர்தி ஓன்று அனுராதபுரத்துக்கு 12 கி.மீ. தொலைவில் மிகிந்தலைக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் இதில் பயணம் செய்த 4 இலங்கை வான்படை வீரர்கள் இறந்தனர்.
- அக்டோபர் 22 - அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 14 படையினர், மற்றும் 21 புலிகள் கொல்லப்பட்டனர். (நியூஸ் லிட்.), (புதினம்)
- அக்டோபர் 18 - மன்னாரில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகொன்றின் மீது இலங்கைக் கடற்படையின சுட்டதில் இரண்டு குழந்தைகளும் ஒரு முதியவரும் இறந்தனர். குழந்தைகளின் தாயார் மறும் இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- அக்டோபர் 15 - தெற்கு இலங்கையின் யால சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்த இராணுவ முகாம் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். (தமிழ்நெட்)
- அக்டோபர் 7- கொழும்பில் அக்டோபர் 6இல் கடத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட கணித விரிவுரையாளர் பொ. மகினன் (அகவை 62) அவர்களின் சிதைந்த உடல் வெள்ளவத்தையில் கண்டுபிடிக்கப்பட்டது.(தமிழ்நெட்)