வார்ப்புரு பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா வயது

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில் in topic உருவாக்கப்பட்டு

ஒரு வயது கூடுதலாக காட்டுகிறதே? வார்ப்புருப் புலிகளின் உதவி தேவை--இரவி (பேச்சு) 06:52, 27 சனவரி 2013 (UTC)Reply

2003 தானே சரியான ஆண்டு? அவ்வாறே மாற்றியுள்ளேன்.--Kanags \உரையாடுக 06:58, 27 சனவரி 2013 (UTC)Reply

வார்ப்புருவின் வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் முன்பு 2003ஆக இருந்ததை 2002ஆக மாற்றி இருந்தேன். அப்படி மாற்றினால் தான் முன்பு சரியான வயதைக் காட்டியது. இப்போது மீண்டும் பிழையாக வந்தது. வார்ப்புருவுக்குள் என்ன கணக்கு போடுகிறது என்று புரியாததால் தான் உதவியை நாடினேன். இது தொடர்ந்து வேலை செய்கிறதா என்று பார்ப்போம். உதவியதற்கு நன்றி--இரவி (பேச்சு) 13:50, 2 பெப்ரவரி 2013 (UTC)

2002 என இட்டாலே சரியான வயதைக் காட்டுகிறது.--Kanags \உரையாடுக 08:02, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
இப்போது சரியாகிவிட்டது. --Anton (பேச்சு) 10:58, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி அன்டன் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:29, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 12:11, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

உருவாக்கப்பட்டு

தொகு

'உருவாக்கப்பட்டு' என்பதை விட 'தொடங்கப்பட்டு' என்பது சரியாக இருக்குமோ? தமிழில் உருவாக்கம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல். நேரடி மொழிபெயர்ப்பாக அதை பயன்படுத்தினால் அழகில்லை. - தமிழ்த்தம்பி (பேச்சு) 06:50, 24 ஆகத்து 2014 (UTC)Reply

தொடங்கப்பட்டு என்பதே பொருத்தம். மாற்றியிருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:15, 24 ஆகத்து 2014 (UTC)Reply
மற்றும் என்ற சொல் பொருந்தாத மாதிரி இருக்கிறது. தேவையில்லாத பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. x ஆண்டுகள், y மாதங்கள், z நாட்கள் என்றோ, x ஆண்டுகளும், y மாதங்களும் முடிவடைந்து/ நிறைவடைந்து, z நாட்கள் ஆகின்றன என்றோ மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:25, 24 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் ஆம், "மற்றும்"-ஐயும் "அல்லது"-ஐயும் இயல்பாக எழுத்திலோ பேச்சிலோ தமிழில் பயன்படுத்தாதபோது, "and/or" மொழிபெயர்ப்பின் ஒரு அழகற்ற எச்சமாய் வந்து த.வி. முழுக்க பரவியிருக்கிறது வருந்தத்தக்கது. தேர்ந்த நிரலர்கள் தானியங்கி எதையாவது எழுதி இதனை திருத்தமுற்பட்டால் நன்றாக இருக்கும்! (இந்த பின்னூட்டத்திலும் அவ்விரண்டையும் எடுத்துக்காட்டாகத் தவிர்த்திருக்கிறேன் ) x ஆண்டுகள், y மாதங்கள், z நாட்கள் என்பதற்கு என் வாக்கு!
Return to "தமிழ் விக்கிப்பீடியா வயது" page.