வாருங்கள்!

வாருங்கள், தமிழ்த்தம்பி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:55, 9 ஆகத்து 2014 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், தமிழ்த்தம்பி!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மணியன் (பேச்சு) 04:03, 9 ஆகத்து 2014 (UTC)

பாராட்டுதொகு

வணக்கம் தமிழ்த்தம்பி! நான் தமிழ்க்குரிசில். :) தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தை பார்த்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் கொள்கை ஒற்றுமை நிறைய இருக்கு! சேர்ந்து செயல்படுவோமாக. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:35, 11 ஆகத்து 2014 (UTC)

நன்றி தலைவா! (குரிசில் னா அதானே) தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம், இன்னைக்கு எங்க என்ன எழுதலாம் சொல்லுங்க ;) -தமிழ்த்தம்பி (பேச்சு) 19:10, 11 ஆகத்து 2014 (UTC)
:P உங்களுக்கு விருப்பமான தலைப்புகளாக தொழில் நுட்பத்தையும், கைபேசிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். புதிய தொழில் நுட்பத்தைப் பற்றியும், கைபேசிகளைப் பற்றியும், இசைத் துறையைப் பற்றியும் கட்டுரை எழுதலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கியும் உதவலாம். படங்களை சேர்க்க விரும்பினால் சேருங்கள். தகவல்களுக்கு சான்றுகளை சேர்த்தால் சிறப்பாக இருக்கும். சிறப்பாக செயல்படுவோருக்கு பதக்கம் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். :) விக்கிப்பீடியாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற உங்கள் யோசனைகளை முன்வையுங்கள். இந்த பக்கத்தில் உள்ள கட்டுரைகளை கண்காணித்து மேம்படுத்தி உதவுங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:12, 12 ஆகத்து 2014 (UTC)
இணைப்புகளுக்கும் குறிப்புகளுக்கும் நன்றி, இப்போதைக்கு நான் "ஏதாவது ஒரு" பக்கத்தைப் படித்து, அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வதோடு பிழைதிருத்தம், தமிழாக்கம், தெரிந்தவற்றைச் சேற்பது போல செய்கிறேன். முடிந்தவரை நீங்கள் சொல்கிறவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி!
  விருப்பம், வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 13 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 11:27, 13 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம் தங்கள் ஆர்வம் வியக்க வைக்கத்தக்க வகையில் உள்ளது. தொடர்ந்து முடியும் போதெல்லாம் பங்களித்து அசத்துங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:21, 13 ஆகத்து 2014 (UTC)
நன்றி மக்களே! கண்டிப்பா தமிழ் மொழியைப் போல் தமிழ் விக்கிப்பீடியாவும் தலைசிறந்து இருக்க ஆனதைச் செய்வேன். தமிழ்த்தம்பி (பேச்சு) 18:34, 13 ஆகத்து 2014 (UTC)

குறிப்புதொகு

  • தனித்தமிழ் விரும்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்
  • பிறரது கட்டுரைகளில் காணப்படும் பிழைகளைச் செம்மையாகத் திருத்துகிறீர்கள்
  • உங்களைப் பற்றிய பக்கத்தில் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள். இதனை விடுத்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழைச் செழிக்கச் செய்யுங்கள்
  • வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)
தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. "பேச்சு"ப்பக்கத்தில் பேச்சுவழக்காக தொடங்கியது அருகில் உள்ள பயனர் பக்கத்திலும் சிதறி விட்டது :) . மாற்றி விடுகிறேன். ஆனால் பேச்சுப்பக்கத்தில் உரையாடல்கள் நடைமுறை தமிழில் இருப்பது இயல்பாக இருக்கும் என்பது என் கருத்து. தமிழ்த்தம்பி (பேச்சு) 03:49, 14 ஆகத்து 2014 (UTC)
இங்கு தமிழகப் பயனர்கள் மட்டுமல்லாது இலங்கைப் பயனர்களும் மலேசியப் பயனர்களும் உள்ளனர். தத்தமது வட்டார வழக்குகளில் எழுதினால் ஏனையோருக்கு புரிவதில் சிக்கல் ஏற்படும். பேச்சு வழக்கில் எழுதினால் உரையாடலில் தொய்வு ஏற்படும். தவிர, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ளூர் வட்டார வழக்குகளிலும் வேறுபாடு உண்டு. எ.கா: சொன்னீர்களே = சொன்னியளே, சொல்லிப்புட்டிய, சொல்லிட்டியே, சொன்னீக... பேச்சு வழக்கின் முக்கிய குறை சொற்சிதைவு ஆகும். எ.கா: விழுந்தான் -> ஊன்ட்டான். எழுத்து வழக்கிலேயே உரையாடுவது நன்று! :) (பேச்சு வழக்கு மட்டும் நடைமுறைத் தமிழ் ஆகாது. அதன் செம்மைப்படுத்தப்பட்ட வடிவான எழுத்து வழக்கும் நடைமுறைத் தமிழே!) உங்கள் பயனர், பேச்சுப் பக்கங்களில் உங்கள் விருப்பம் போல் எழுதிக் கொள்ளுங்கள். அனைவரும் உரையாடும் பொழுது எழுத்து வழக்கை கடைபிடிக்குமாறு வேண்டுகிறேன். குழப்பத்தை தவிர்க்க உதவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:33, 23 ஆகத்து 2014 (UTC)
நல்லதொரு கோணம், எனக்கு நீங்கள் சொல்லும்வரைத் தோன்றவில்லை. நன்றி தமிழ்க்குரிசில். இனிமேல் அப்படியே செய்கிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 20:31, 23 ஆகத்து 2014 (UTC)
//அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது// என்ற உங்களின் எண்ணத்திற்கு, நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 14 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:03, 14 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:25, 14 ஆகத்து 2014 (UTC)

விக்கிப்பீடியா ஆண்டிராய்டு நிரலில் நிரல்மொழியாக தமிழ்/ பிறமொழித் தெரிவுதொகு

விக்கிப்பீடியாவை ஆண்டிராய்டு நுண்ணறிபேசியில் பெரும்பாலும் பயன்படுத்துவதால் அண்மையில் ஆண்டிராய்டு நிரல் நிறுவி பயன்படுத்தி வருகிறேன். இதில் விக்கிப்பீடியா உள்ளடக்க மொழியைத் தெரிவு செய்ய வழி இருந்தாலும், நிரலின் மொழி, பேசியின் இயல்பான மொழியாகவே காட்டுகிறது (நமது பேசியில் பேசி மொழித் தெரிவுகளில் தமிழ் இல்லை :( ), அதனை மாற்றுவதற்கான வழியும் இல்லை, இதைக்குறித்து உதவிப்பகுதியில் இருந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஒரு பக்சில்லா இணைப்பை பதிலாக அனுப்பியிருந்தனர். விரைவில் இதை விக்கிப்பிடியா நிரல் மூலத்தில் சேர்க்க விரும்புகிறேன். இதைப்பற்றி ஏதேனும் தெரிந்தாலோ இணைப்புகள் இருந்தாலோ, இங்கு சேர்க்கவும். நன்றி! - தமிழ்த்தம்பி (பேச்சு) 08:15, 14 ஆகத்து 2014 (UTC)

உங்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதினால் உங்களுக்கும் இந்த பக்கத்தை தொகுத்த சிலருக்கு மட்டுமே தெரியும், மற்றவர்களுக்கு தெரியாது. எனவே, இந்த பகுதியை ஆலமரத்தடியின் தொழில் நுட்பப் பிரிவில் சேருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:09, 21 ஆகத்து 2014 (UTC)
நன்றி தமிழ்க்குரிசில்! ஆயிற்று. - தமிழ்த்தம்பி (பேச்சு) 10:19, 23 ஆகத்து 2014 (UTC)

செய்யவேண்டியவை (TODO)தொகு

இந்த பகுதி என் தனிப்பட்ட விக்கிப்பீடியா செய்யவேண்டியவைகளை தொடர பயன்படுத்துகிறேன். அத்தோடு யாராவது நான் ஏதும் செய்ய விரும்பினால் இங்கே சேர்க்கத் தயங்க வேண்டாம்.

  1. பத்மன், பதுமன், பதுமனார்,பதுமனார் (உரைநூல் ஆசிரியர்) பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
  2. வார்ப்புருக்கள் தமிழாக்கம் - வார்ப்புரு பெயர் உட்பட
  3. மொழி பயனர் பெட்டிகளில் அம்மொழியோடு தமிழிலும் விளக்கம்

இதில் எதையாவது நீங்களோ வேறொருவரோ செய்துமுடித்துவிட்டதாக அறிந்தால் அவ்வரியை அருள்கூர்ந்து அடிக்கவும் (நடுக்கோடிட்டு).

இந்த பகுதியை பயனர்:தமிழ்த்தம்பி/todo என்றவாறான பக்கத்தில் தனியாக எழுதி வையுங்கள். பேச்சுப் பக்கம் நிரம்பி வழிந்தால் அடிக்கடி பரணேற்றிவிடுவோம். :) உங்களுக்கு தேவைப்படும் கட்டுரைகள் இங்கு இல்லாவிடில், விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் என்ற பக்கத்தில் கோரிக்கை வையுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:20, 21 ஆகத்து 2014 (UTC)
நீங்கள் விரும்பினால் பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை என்று பெயரிட்டு ஒரு புதிய பக்கத்தினைத் தொடங்கலாம். இந்தப் பக்கம் பயனர் வெளி என அழைக்கப்படும். இந்தப் பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள், தேடுபொறிகளில் அகப்படுதலைத் தவிர்க்க __NOINDEX__ என்பதனை பக்கத்தின் ஆரம்ப வரியில் இடலாம்! உதாரணம்: பயனர்:Selvasivagurunathan m/இசை. இது ஒரு ஆலோசனையே; கட்டாயமல்ல. உங்களுக்கு எது வசதியோ அதன்படி செய்யுங்கள்! (தமிழ்க்குரிசில் & என்னிடையே தொகுப்பு முரண் ஏற்பட்டுவிட்டது - அதாவது ஒரே நேரத்தில் இருவரும் ஒரே இடத்தில் எழுதியதால்! இருந்தபோதிலும் கூடுதல் தகவல்களுக்காக என்னுடைய குறிப்புகளையும் பதிந்துள்ளேன்; சக பயனருக்கு போட்டி போட்டுக் கொண்டு உதவுவது, தமிழ் விக்கியின் பெருமை!)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 21 ஆகத்து 2014 (UTC)
நன்றி மக்களே. கணினியில் வரும்போது இதைச் செயல்படுத்துகிறேன். (செல்பேசியில் பக்கங்கள் உருவாக்குதல் எளிதல்ல. விக்கி கையடக்க தளமும் நிரலும் பெரும்பான்மை படித்தலுக்காக வடிவமைக்கப்பட்டது போலிருக்கின்றன.) - தமிழ்த்தம்பி (பேச்சு) 20:28, 23 ஆகத்து 2014 (UTC)
ஆயிற்று - பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை பார்க்க. நன்றி - தமிழ்த்தம்பி (பேச்சு) 11:46, 27 ஆகத்து 2014 (UTC)

வார்ப்புருத் தலைப்பு தமிழாக்கம்தொகு

நீங்கள் செய்ய வேண்டியவையாக குறித்து வைத்துள்ளதில் வார்ப்புரு பெயரும் தமிழாக்கம் செய்யும் முனைவைக் கண்டேன். அவ்வாறு செய்தால் ஆங்கிலத் தலைப்பிற்கு வழிமாற்றுக் கொடுக்கவும். தவிரவும் சில ஆங்கிலத் தலைப்புக் கொண்ட வார்ப்புருக்கள் ஒரே பெயரில் uppercase, lower case பயன்படுத்தி இருவேறு வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை ஒன்றாக்கினால் இணைக்கப்பட்டுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளில் பெரும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் templateக்கு மாற்றாக/உடனாக module பயன்படுத்துகின்றனர். இதற்கான கலைச்சொல்லும் தமிழாக்கமும் மேற்கொள்ள இயன்றால் நல்லது.--மணியன் (பேச்சு) 12:43, 27 ஆகத்து 2014 (UTC)

நன்றி மணியன். உங்கள் பரிந்துரையை பயனர்:தமிழ்த்தம்பி/செய்யவேண்டியவை-க்கு நகல்செய்திருக்கிறேன். வார்ப்புருக்களைத் தொகுக்கும்போது இவற்றை நினைவில் வைத்துக்கொள்கிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 13:55, 27 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
//அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது.

படிக்கப் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது, எழுதவும் பயன்படுத்தினால் ஊருக்கே நல்லது!//

அய்யோ அய்யோ. தம்பி கருத்தச் சொன்னாலும் காமெடியாச் சொல்றாப்புல. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:24, 14 ஆகத்து 2014 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:51, 14 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:46, 14 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:38, 15 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 10:51, 15 ஆகத்து 2014 (UTC)
  விருப்பம்--மணியன் (பேச்சு) 12:44, 27 ஆகத்து 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், தமிழ்த்தம்பி!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 19:35, 6 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி இரவி. ஆனால் இதற்கு நான் தகுதியுற்றவனே அல்ல. கைபேசி விக்கி பயன்பாட்டால் நான் ஏற்கனவே தொழில்நுட்ப பக்கங்களில் தெரிவித்ததுபோல தொகுப்பு எண்ணிக்கை ஒன்று ஐந்தாக வந்து கூட்டிக் காட்டுகிறது. எனினும் சமூக ஊக்கத்திற்கிசைந்து இயல்பான தொகுப்புகள் இவ்வாறாக வர உழைப்பேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 14:57, 7 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:08, 8 செப்டம்பர் 2014 (UTC)
  விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:53, 9 செப்டம்பர் 2014 (UTC)

தி விக்கிப்பீடியா அட்வென்சர் டிரான்ச்லேட் பண்ணாக சகாயம்தொகு

நான் இந்த பக்கத்தில் உங்கள் பதில் பார்த்திருக்கிறேன். நான் உங்களுக்கு உதவலாம்.--రహ్మానుద్దీన్ (பேச்சு) 21:41, 5 அக்டோபர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் தமிழ்த்தம்பி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:13, 30 திசம்பர் 2014 (UTC)