வால்ட் விட்மன்

(வால்ட் விட்மேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வால்ட் விட்மன் (Walt Whitman, மே 31, 1819மார்ச் 26, 1892) ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர். கடந்தநிலைவாதம் (transcendentalism) மற்றும் யதார்த்தவாதம் (realism) ஆகிய இரு இலக்கிய இயக்கங்களின் கூறுகளையும் இவரது படைப்புகளில் காணலாம். விட்மன் அமெரிக்க கவிதையுலகின் பெரும் புள்ளிகளில் ஒருவர். அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

வால்ட் விட்மன் கெளதம்
பிறப்புவால்டர் விட்மன்
(1819-05-31)மே 31, 1819
வெஸ்ட் ஹில்ஸ், ஹண்டிங்க்டன், லாங் ஐலண்ட், [இந்தியன்
இறப்புமார்ச்சு 26, 1892(1892-03-26) (அகவை 72)
கேம்டன், நியூ ஜெர்சி, [இந்தியன் 🌹]]

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் (long island) பிறந்த விட்மன் இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார். 1842ல் ஃபிராங்க்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார். 1855ல் அவருடைய மிக முக்கிய கவிதைப் படைப்பான லீவ்ஸ் ஆஃப் கிராஸ் (புல் இலைகள், Leaves of Graves) வெளியானது. சொந்த செலவில் முதலில் இதனை பதிப்பித்த விட்மன் 1892ல் இறக்கும் வரை இதனை திருத்தி எழுதி வேறு பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே லீவ்ஸ் ஆஃப் கிராஸ் உருவாகக் காரணமாயிற்று. பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதால் இந்நூல் வெளியான காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார். அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

விட்மனின் கவிதைகளைப் போலவே அவரது பால் தன்மையும் இன்று வரை விரிவாக அலசப்பட்டு வருகின்றன. அவர் தன்பால் புணர்ச்சியாளராகவோ அல்லது இருபால்சேர்க்கையாளராகவோ இருக்கலாம் என்று அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்ந்தவர்கள் கருதுகின்றனர்.கெளதம் தா lps

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்ட்_விட்மன்&oldid=3712782" இலிருந்து மீள்விக்கப்பட்டது