வால்மீகி தீர்த்தக் கோயில்


ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது.[1][2] பகவான் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வால்மீகி தீர்த்த ஆசிரமம் என்றும் அழைப்பர். இக்கோயிலை பல நூற்றாண்டுகளாக பல முக்கிய துறவிகள் மற்றும் முனிவர்கள் பார்வையிட்டதாக நம்பப்படுகிறது. கோயில் பல முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. தற்போதைய அமைப்பு 1 டிசம்பர் 2016 கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் கருவறையில் 800 கிலோ கிராம் எடை மற்றும் 8 அடி உயரம் கொண்ட வால்மீகி முனிவரின் தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது. [3][4][5]வால்மீகி தீர்த்த ஆசிரம மேம்பாட்டுக் குழுவால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.[6][7]

வால்மீகி ஆசிரமம்
भगवान वाल्मीकि तीर्थ स्थल/ਭਗਵਾਨ ਵਾਲਮੀਕ ਸਥਲ
பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம்/இராமர் தீர்த்தக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பகவான் வால்மீகி தீர்த்தச் சாலை, அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா
சமயம்இந்து சமயம்
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ்

இக்கோவில் வளாகம் பரந்து விரிந்துள்ளது மற்றும் பல்வேறு இந்து தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சிறிய கோவில்களை உள்ளடக்கியது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மைக் கோயில் வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அழகிய அமைப்பாகும். கோவிலின் கட்டிடக்கலை பஞ்சாபில் பொதுவான இந்து மற்றும் இஸ்லாமிய பாணிகளை ஒருங்கிணைக்கிறது. கோவிலின் குவிமாடம் மற்றும் கோபுரங்கள் கவர்ச்சிகரமானவை மற்றும் தூரத்திலிருந்து பார்க்க முடியும்.

கோயில் வளாகத்தில் ஒரு பெரிய குளியல் கட்டம் உள்ளது. இது பக்தர்கள் புனித நீராட பயன்படுத்துகிறது. கோவிலில் உற்சாகமாக கொண்டாடப்படும் இராம நவமி போன்ற பண்டிகைகளின் போது இந்த தீர்த்தக் குளத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பரில் நடைபெறும் கோவிலின் வருடாந்திர திருவிழாவும் ஒரு பிரபலமான நிகழ்வாகும்.

தொன்ம வரலாறு

தொகு

புராணங்களின்படி, இத்தீர்த்தத் தலம் இராமரின் மகன்களான லவன் மற்றும் குசன் பிறந்த இடமாக நம்பப்படுகிறது[8]. இராமாயணத்தின், இராம-இராவணப் போருக்குப் பிறகு, இராமர் தனது மனைவி சீதையுடன் அயோத்திக்குத் திரும்பியபினார். இராவணின் அசோக வனத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் சீதையின் தூய்மை பற்றிய வதந்திகள் காரணமாக, கருவுற்றிருந்த சீதையை அயோத்தியை விட்டு வனவாசம் செல்லச் சொன்னார். இலட்சுமணனால் கூட்டுச் செல்லப்பட்ட சீதை, கங்கை ஆற்றின் கரையில் இருந்த வால்மீகி ஆசிரமத்திற்கு அருகில் விட்டுச் சென்றான். வால்மீகி ஆசிரமத்தில் சீதை லவன் மற்றும் குசனைப் பெற்றெடுத்தாள்.

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Panorama and museum important to us: Valmiki community" (in en-US). The Indian Express. 21 November 2016. https://indianexpress.com/article/cities/chandigarh/panorama-and-museum-important-to-us-valmiki-community-4386771/. 
  2. "Bhagwan Valmiki Tirath Sthal - Government of Punjab, India". punjab.gov.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  3. "For Dalits, Punjab rolls out a pre-poll Valmiki idol darshan". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/For-Dalits-Punjab-rolls-out-a-pre-poll-Valmiki-idol-darshan/articleshow/55506260.cms. 
  4. "Punjab Govt declares holiday on Dec 1". uni india. 30 July 2018. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  5. "Grand plans for Dalits in Punjab". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chandigarh/Grand-plans-for-Dalits-in-Punjab/articleshow/56054865.cms. 
  6. "Badal approves panel for development of Sri Valmiki Ashram at Bhagwan Valmiki Tirath" (in en-gb) இம் மூலத்தில் இருந்து 13 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150913110652/http://www.yespunjab.com/punjab/item/1676-badal-approves-panel-for-development-of-sri-valmiki-ashram-at-ram-tirath. 
  7. Pioneer, The. "Valmiki Tirath Sthal to be dedicated on Dec 1" (in en). The Pioneer. https://www.dailypioneer.com/state-editions/chandigarh/valmiki-tirath-sthal-to-be-dedicated-on-dec-1.html. 
  8. Hinduism, Dr. S.S. Kapoor, Hemkunt Press, 2005