வாழைமர அணில்

வாழைமர அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகெலும்பி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கொறிணி
குடும்பம்:
பேரினம்:
காலோசையூரசு
இனம்:
கா. நோடாடாசு
இருசொற் பெயரீடு
காலோசையூரசு நோடாடாசு
போடாடேர்ட், 1785)
துணையினங்கள்
  • கா. நோ. நோடாடாசு
  • கா. நோ. தையார்தி
  • கா. நோ. விட்டேட்டசு
  • கா. நோ. சப்பூசசு
  • கா. நோ. மினியேடசு
பரவல் சிவப்பு நிறத்தில்

வாழைமர அணில், கிழக்கத்திய அணில் (plantain squirrel, oriental squirrel) அல்லது மூவர்ண அணில் (காலோசையூரசு நோடாடாசு) என்பது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் பரவலான வாழ்விடங்களில் காணப்படும் சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இவை இப்பகுதியில் உள்ள காடுகள், சதுப்புநிலங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளில் காணப்படுகின்றன. பழ விவசாயிகள் இவற்றை தீங்குயிரிகளாக கருதுகின்றனர்.

வாழைமர அணில்
இனச்சேர்க்கையின் போது ஓரிணை

விளக்கம்

தொகு

வாழைமர அணிலின் உடல் நீளம் சுமார் 20–30 cm (8–12 அங்) ஆகும். உடல் நீளத்தினை ஒத்த அளவிலான வாலினைக் கொண்டது. இது சாம்பல்/பழுப்பு நிறத்தில் கஷ்கொட்டை நிற வயிற்றுடன், பக்கவாட்டு கருப்பு மற்றும் வெள்ளை பட்டையுடன் காணப்படும். இது மரங்களில் மிக விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கக்கூடியது. மரங்களில் கிளைகளுக்கு இடையில் சில மீட்டர்கள் தாண்டக்கூடியது. அரிதாகவே தரையில் காணப்படும்.

உணவு

தொகு

வாழைமர அணிலின் உணவில் பெரும்பாலும் இலைகள் மற்றும் பழங்கள் உள்ளன. ஆனால் இவை பூச்சிகள் மற்றும் பறவைகளின் முட்டைகளையும் சாப்பிடுகிறது. எறும்புகளின் இளம் உயிரிகளை உண்பதற்காக மரக் கிளைகளை உடைப்பது அறியப்படுகிறது.[2] இது மாம்பழம், பலாப்பழம் அல்லது தேங்காய் போன்ற தன்னை விடப் பெரிய பழங்களை உண்ணும்.

வகைப்பாட்டியல்

தொகு

காலோசையூரசு என்ற இதன் பேரினப் பெயர் "அழகான அணில்" என்று பொருள்படும். குளோஸின் அணில் (காலோசையூரசு அல்பெசென்சு) இதன் துணையினமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Duckworth, J. W.; Lee, B.; Tizard, R. J. (2008). "Callosciurus notatus". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/3600/0. பார்த்த நாள்: 6 January 2009. 
  2. Anja Leo, Damage to Macaranga ant-plants by a myrmecophagous squirrel (Callosciurus notatus, Rodentia, Sciuridae) in West Malaysia "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைமர_அணில்&oldid=3626314" இலிருந்து மீள்விக்கப்பட்டது