வா தோட்டங்கள்

வா தோட்டங்கள் (Wah Gardens) என்றும் முகலாயத் தோட்டம் வா என்றும் அழைக்கப்படும் இது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள ஹசன் அப்தாலின் வா கிராமத்தில் அமைந்துள்ள முகலாயப் பேரரசர் அக்பரின் (1542-1605) காலத்தைச் சேர்ந்த ஒரு தோட்ட வளாகமாகும். முகலாய ஆட்சியின் பின்னர் இந்த தளம் பெரும்பாலும் கைவிடப்பட்டது. மேலும் இது பல ஆண்டுகளாக இடிந்து விழுந்த நிலையில், இப்போது அது பாக்கித்தான் தொல்பொருள் துறையால் மீட்டெடுக்கப்படுகிறது [1]

வா தோட்டங்கள்
واہ باغ
வா தோட்டங்களின் முன்பகுதி
Map
அமைவிடம்ஹசன் அப்தால், பாக்கித்தான்
வகைமுன்னாள் முகலயாத் தோட்டம்

அமைவிடம்

தொகு

இந்த தோட்டங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வடமேற்கில் 50 கி.மீ தொலைவில் பிரதான பெரும் தலைநெடுஞ்சாலையில் அமைந்துள்ள தற்போதைய காரிஸன் நகரமான வாவுக்கு அருகிலுள்ள பழைய கிராமமான வாவில் உள்ளது.

வரலாறு

தொகு

பேரரசர் ஜஹாங்கிரின் மைத்துனரான ராஜா மான் சிங், அக்பரின் அரசவைத் தலைவராக இருந்தார். இவர், லாகூரிலிருந்து சிறிநகர் செல்லும் பழைய பாதையில் தோட்டங்களை கட்டினார். [2] எதிரிகளின் ஊடுருவல்களைத் தடுக்க 1581 முதல் 1586 வரை அவர் வாவில் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த காலத்தில் பன்னிரண்டு கதவுகளால் சூழப்பட்ட ஒரு குளத்தை உருவாக்கினார். முகலாய பேரரசர் ஜஹாங்கிர் காபூலுக்குச் செல்லும் போது 1607 ஏப்ரல் 29 அன்று இங்கு தங்கி குளத்தில் மீன்பிடித்துச் சென்றார். உண்மையில், தற்போதைய பழைய வா கிராமம் ஜலால் கான் கட்டாருக்குப் பிறகு முதலில் 'ஜலால் சர்' என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஜஹாங்கிரால் 'வா' என்று பெயர் மாற்றப்பட்டது.

ஜஹாங்கிர் தனது சுயசரிதையில் (மொழிபெயர்ப்பில்) எழுதினார்: "கி.பி 1216, முஹர்ரம் 12 ஆம் தேதி தான் ஹசனப்தாலில் தங்கியிருந்தேன். இந்த இடத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் இரண்டு மைல் தொலைவில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. தண்ணீர் மிகுந்த வேகத்துடன் விழுகிறது. குளத்தின் மையத்தில் நீர்வீழ்ச்சியின் முக்கிய வெளியேற்றம் உள்ளது. ராஜா மான் சிங் ஒரு சிறிய அழகான கட்டிடத்தை உருவாக்கியுள்ளார். இங்குள்ள குளத்தில் நிறைய மீன்கள் உள்ளன. நான் இந்த அழகான இடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். நான் வலையைக் கொண்டு குளத்தில் சுமார் 10 முதல் 12 மீன்களைப் பிடித்தேன். இந்த மீன்களின் மூக்கில் முத்துக்களை தைத்தபின் மீண்டும் தண்ணீரில் விடப்பட்டன ". [3]

பேரரசர் ஷாஜகான் 1639 இல் காபூலுக்கு செல்லும் வழியில் இங்கு தங்கினார். அவர் இக்கட்டிடங்களை புனரமைக்க உத்தரவிட்டார். அந்த நாட்களில் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான அஹ்மத் மாமர் லஹோரி தோட்டங்களையும், அரண்மனைகளையும் கட்ட ஆகியவற்றைத் திட்டமிட்டார். இவரது மேற்பார்வையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணிகள் நடைபெற்றது. இந்த தோட்டம் முகலாய கட்டுமான பாணியில் செய்யப்பட்டது. அவர் அழகான பன்னிரண்டு கதவு கட்டமைப்புகள், கால்வாய்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கினார். இந்த பன்னிரெண்டு கதவுகளின் தெற்கு முனையில் குளிர்ந்த மற்றும் சூடான நீரின் கலவையைக் கொண்ட குளியலறைகளை அவர் கட்டினார். கட்டமைப்புகளின் உள் பகுதி பூசப்பட்டிருக்கிறது. சிறிய அறைகளின் சுவர்கள் பூக்கள் மற்றும் இதழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஷாஜகான் காபூலுக்கான பயணங்களில் தோட்டங்களில் தங்கியிருந்தார், கட்டுமானம் முடிந்தபின் நான்கு முறை: 1646, 1647, 1649 மற்றும் 1654 இல். ஷாஜகானின் சமகாலத்தவர்கள், அதாவது அப்துல் ஹமீத் லஹோரி மற்றும் முஹம்மது சலே காம்போ ஆகியோர் இந்த தோட்டத்தை சொர்க்கத்தின் அறங்காவலராக அறிவித்து பூமியில் சொர்க்கத்தின் தோட்டத்திற்கு மாற்றாக அறிவித்தனர்.

முகலாய பேரரசர் ஔரங்கசீப் 1676 சூலையில் தோட்டத்தில் தங்கியிருந்தார். துராணிப் பேரரசு (1747-1826) மற்றும் பின்னர் சீக்கியர் ஆட்சியின் (1826-1849) சகாப்தத்தில் இந்த தோட்டம் மோசமாக சேதமடைந்தது. பஞ்சாப் இணைக்கப்பட்ட பின்னர், பிரித்தானிய அரசு 1865 இல் தோட்டங்களை, தங்களிடம் பணிபுரிந்த நவாப் முகமது ஹயாத் கான் என்பவரிடம் ஒப்படைத்தது.

படக் காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. https://www.mughalgardens.org/html/roads-wah.html
  2. Schimmel, Annemarie (2004). The Empire of the Great Mughals: History, Art and Culture. Reaktion Books. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1861891857. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017. shalimar lahore public.
  3. Tuzk i Jahangiri translation by A. Rogers ICS, and edited by Beveridge, 1909
"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_தோட்டங்கள்&oldid=3122224" இலிருந்து மீள்விக்கப்பட்டது