முகமது ஹயாத் கான்

நவாப் [1] முகம்மது ஹயாத் கான் (Muhammad Hayat Khan) (1833-1901) [2] இவர் ஒரு இந்திய முஸ்லிம் ஆவார். இவர் பிரித்தானிய இந்திய அரசாங்கத்தில் சேவை செய்தார். மேலும் கணிசமாக பதவியிலும் உயர்ந்தார். [3]

முகமது ஹயாத் கான்
சிஎஸ்ஐ
சுமார் 1860களில் முகமது ஹயாத் கான்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சீக்கியப் பேரரசின் போது பஞ்சாபின் வா கிராமத்தில் கத்தார் தலைவரான சர்தார் கரம் கானின் மகனாகப் பிறந்தார்.[4] முதல் ஆங்கிலேய-சீக்கியப் போரின் முடிவில், இவரது தந்தை கரம் கான், கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சாதகமான உறவை வளர்த்துக் கொண்டார். சர் ஹென்றி லாரன் என்பவரின் கீழ் பஞ்சாபை நிர்வகிக்க நியமிக்கப்பட்டார்.

1848 சூன்-சூலையில், சீக்கிய வீரர்களின் எழுச்சியைத் தொடர்ந்து தட்சசீலம் அருகே ஒரு முக்கியக் கோட்டையைக் கைப்பற்றும் பணியில் ஜான் நிக்கல்சனுடன் மார்கல்லா கண்வாய்க்குச் சென்றார். [a] [5] சண்டையின் போது, அவர் ஒரு அபாயகரமான சூழ்நிலையில் சிக்கியபோது நிக்கல்சனை தைரியமாக மீட்டதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். அதன்பிறகு, நிக்கல்சன் மற்றும் கரம் கான் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

1848 இன் பிற்பகுதியில், கரம் கான் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பத்தே கான் என்பவரால் கொல்லப்பட்டார். அவரது மனைவியும் குழந்தைகளும் நிக்கல்சன் கவனித்துக் கொண்டார். [6]

தொழில் தொகு

முகமது ஹயாத் கான், அடிப்படைக் கல்வியைப் பெற்றபின், குறிப்பாக பாரசீக மொழியில் சரளமாக இருந்தார். சிறுவயதிலேயே இவரை நிக்கல்சன் தனது பாரசீக மொழிபெயர்ப்பாளராக நியமித்துக் கொண்டார். அதன்பிறகு, இவர் பஞ்சாப் [b] மற்றும் 'பஞ்சாப் எல்லைப்புறம்' (பின்னர் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியப் பகுதிகள்) மற்றும் செப்டம்பர் 1857 இல் சிப்பாய் கிளர்ச்சியின் போது கலகம் ) தில்லியில் இறக்கும் வரை நிக்கல்சனின் முற்றுகைகள் மற்றும் பயணங்கள் முழுவதும் நெருங்கிய தோழராகவும் உதவியாளராகவும் பணியாற்றினார்.

1857 ஆம் ஆண்டில், தில்லியின் காஷ்மீர் வாயிலில் நடந்த தாக்குதலில் நிக்கல்சன் படுகாயமடைந்தபோது இவரது சேவைகளை அப்போதைய பஞ்சாபின் தலைமை ஆணையராக இருந்த சர் ஜான் லாரன்ஸ் என்பவரிடம் பரிந்துரைத்தார். இவரின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இது பல தசாப்தங்களாக பரவிய கானின் புகழ்பெற்ற வாழ்க்கையின் தொடக்கமாக நிரூபிக்கப்பட்டது.

விரைவில் இந்தியக் கலகம் முடிவுக்கு வந்தவுடன், இவர் பஞ்சாபில் உள்ள தலாகாங்கில் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர், விரைவில் ஒரு வருவாய் அதிகாரியாக மாற்றப்பட்டார். 1862 ஆம் ஆண்டில், இவர் கூடுதல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று பன்னுவுக்கு அனுப்பப்பட்டார்.

1872 இல், கான் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்றார். [7] இரண்டாம் ஆங்கிலேய-ஆப்கான் போரின் போது, குர்ரம் பள்ளத்தாக்கு களப் படையின் தளபதியாக சர் பிரடெரிக் ராபர்ட்ஸ் அனுப்பப்பட்டபோது, கான் அவரது முக்கிய உதவியாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். [8]

முஸ்லிம்களின் கல்விக்கான பங்களிப்புகள் தொகு

முக்ம்மது ஹயாத்கான் மூத்த முஸ்லிம் சிந்தனையாளரும், அறிஞரும், எழுத்தாளரும், கல்வி சீர்திருத்தவாதியின் மிக நெருங்கிய நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவருமான சையது அகமது கான் என்பருடன் நெருக்கமாக இருந்தார். மேலும், அலிகரில் ஆங்கிலேய-ஓரியண்டல் கல்லூரியை (பின்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்) [9] நிறுவ உதவியாக இருந்தார். 1888, 1889 மற்றும் 1890 சையது அவர்களால் தொடங்கப்பட்ட கல்வி மாநாடுகளின் ஆண்டு அமர்வுகளுக்கு தலைமை தாங்கினார். [10] [11] தனது சொந்த மாகாணமான பஞ்சாபில் முஸ்லிம் சமூக-கலாச்சார மேம்பாட்டை ஊக்குவிப்பதில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். மேலும் பஞ்சாபின் புதிய பல்கலைக்கழகக் கல்லூரியை நிறுவுவதற்கு நன்கொடை அளித்தவர்களில் ஒருவராகவும் இருந்தார். [12]

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. . 1985. 
  2. See Revised edition (1940) of Griffin & Massey Chiefs and Families of Note in the Punjab, Orig. Lahore, 1910, Vol II, p.293; and also K.Haidri, Tarikh I Potohar (Urdu), Lahore 1962, pp.74-74. MHK's date of birth is given wrongly as 1829 in Charles Allen, Soldier-Sahibs, London 2000, due to a confusion with another Punjabi chief
  3. MSD Butler, Final Report on the Attock district for 1901-1904, Lahore, 1905, p.110
  4. Charles Allen, Soldier-Sahibs, London, 2000, p. 166
  5. Allen, p.166
  6. Allen, pp.173-175
  7. MK Awan, Tarikh ul Awan, Lahore, n.d., p.31
  8. See Field Marshal Lord Roberts, K.P., V.C., Forty-one Years in India (Richard Bentley & Son, London 1911); volume ii, p.239
  9. Malik, pp.10-11
  10. Malik, p.11
  11. Also see Muhammad Habib Khan Tarin
  12. JF Bruce, A History of the University of the Punjab, Lahore, 1933, p.48
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_ஹயாத்_கான்&oldid=3081706" இலிருந்து மீள்விக்கப்பட்டது