தட்சசீலம் (நகரம்)

தட்சசீலம் (Taxila) (உருது: ٹيکسلا‎), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கிமீ தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.

தட்சசீலம்
ٹيکسلا
நகரம்
தட்சசீல நகரத்தின் தர்மராஜிக தூபியின் காட்சி
தட்சசீல நகரத்தின் தர்மராஜிக தூபியின் காட்சி
தட்சசீலம் is located in பஞ்சாப், பாக்கிஸ்தான்
தட்சசீலம்
தட்சசீலம்
பாகிஸ்தானில் தட்சசீல நகரத்தின் அமைவிடம்
தட்சசீலம் is located in பாக்கித்தான்
தட்சசீலம்
தட்சசீலம்
தட்சசீலம் (பாக்கித்தான்)
ஆள்கூறுகள்: 33°44′45″N 72°47′15″E / 33.74583°N 72.78750°E / 33.74583; 72.78750
நாடு பாக்கித்தான்
மாகாணம் பஞ்சாப்
மாவட்டம்ராவல்பிண்டி
ஏற்றம்
549 m (1,801 ft)
மக்கள்தொகை
 (1998)
 • மொத்தம்48,904[1]
 Population of Taxila Tehsil: 371,140 [1]
இனம்Taxilan
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
47080
தொலைபேசி குறியீடு எண்596

சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2] என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. [3] மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது. [4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது.[6][7][8][9][10]

தொல்லியல் களம்

தொகு

பண்டைய தட்சசீலத்தில் கற்கால குகைகள், தர்மராஜிக தூபி உள்ளிட்ட நான்கு தொல்லியற்களங்களில் பௌத்த விகாரைகள் மற்றும் தூபிகளின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது.[11] சிதிலமடைந்த பண்டைய தட்சசீல நகரத்தை 1980ல் யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது. [12]

பெயர்க்காரணம்

தொகு

வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் இந்நகரம் நிறுவப்பட்டதால், சமசுகிருத மொழியில் தட்சசீலம் எனப்பெயராயிற்று. இராமரின் தம்பி பரதன் தன் மகன் தட்சனின் பெயரால் இந்நகரை நிறுவியதால், சமசுகிருத மொழியில் இந்நகரை தட்சனின் பாறை என்றும் அழைப்பர்.[13]

கிரேக்க புவியியல் அறிஞரான தாலமி வரைந்த உலகப் புவியியல் வரைபடத்தில் தட்சசீலம் நகரத்தை, தக்சீலா எனக் குறித்துள்ளார். [14]

வரலாறு

தொகு

துவக்க கால குடியிருப்புகள்

தொகு

கிமு 3360 முதல் தட்சசீலம் நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தனர் என்பதை, இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் அறியப்படுகிறது. [15] கிமு 2900 காலத்திய சிந்து வெளி நாகரீகம் மற்றும் ஹரப்பா காலத்திய கட்டுமானங்கள் மற்றும் தொல்பொருட்கள் தட்சசீலம் நகர அகழ்வாய்வின் போது கிடைத்துள்ளது. [15] சிந்து வெளி நாகரீகத்தின் அழிவின் போது, தட்சசீலம் நகரமும் கைவிடப்பட்டுள்ளது.

பின்னர் தட்சசீலம் நகரத்தின் முதல் பெரிய குடியிருப்பு கிமு 1100ல் நிறுவப்பட்டது.[3][16][17][18] கிமு 900ல், தட்சசீலம் காந்தார நாட்டின் தலைநகரான புஷ்கலாவதியுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தது என இந்நகரத்தில் கிடைத்த மண்பாண்ட சில்லுகள் மூலம், அறியப்படுகிறது. [19]

மகத நாட்டையும் நடு ஆசியாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் பண்டைய நகரங்களான பாடலிபுத்திரம், பெஷாவர், காஷ்மீர், தட்சசீலம், பெஷாவர், காந்தாரத்தின் புஷ்கலாவதி நகரம், கபீசா மற்றும் பாக்திரியா இருந்தது. [20]

பல்வேறு அரச வம்சங்களின் கீழ் தட்சசீலம்

தொகு

தட்சீல நகரம், பல அரச வம்சங்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

 
அகாமனிசியப் பேரரசின் கிழக்கு எல்லை

வீழ்ச்சி

தொகு

சீன பௌத்த பிக்குவான யுவான் சுவாங் கிபி 400ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலப் பல்கலைக்கழகம் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார். [22]

வெள்ளை ஹூணர்களான ஹெப்தலைட்டுகள் ஆட்சியில், கிபி 470ல் காந்தாரம் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றும் போது தட்சசீலம் நகரத்தின் பௌத்த விகாரங்கள் மற்றும் தூபிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. [23] சீன பௌத்த பிக்குவான யுவான் சுவாங் கிபி 630 மற்றும் 643ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலம் நகரமும், தட்சசீலப் பல்கலைக்கழகமும் சிதிலமடைந்து காணப்பட்டதாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.

அகழாய்வில் பண்டைய தட்சசீல நகரம்

தொகு

அலெக்சாண்டர் கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞரால், 19ம் நூற்றாண்டின் மத்தியில், சராய் கோலா எனுமிடத்தில், நடத்தப்பட்ட அகழாய்வில், சிதிலமைடந்த பண்டைய தட்சசீல நகரம் கண்டெடுக்கப்பட்டது. தட்சசீலம் அருகே உள்ள தர்மராஜிக தூபியை ஜான் மார்ஷல் எனும் பிரித்தானியர் அகழ்வாய்வு செய்து பல பௌத்த தொல்பொருட்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகளை வெளிப்படுத்தினார்.

தட்சசீல நகரத்திற்கு அருகே அமைந்த சௌலியன் பௌத்த விகாரை

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தட்சசீலம் நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17
(63)
19.5
(67.1)
24.2
(75.6)
29.9
(85.8)
35.4
(95.7)
39.5
(103.1)
35.8
(96.4)
33.7
(92.7)
33.6
(92.5)
30.9
(87.6)
25
(77)
19.3
(66.7)
28.7
(83.6)
தினசரி சராசரி °C (°F) 9.8
(49.6)
12.5
(54.5)
17.3
(63.1)
22.6
(72.7)
27.6
(81.7)
32
(90)
30.3
(86.5)
28.6
(83.5)
27.6
(81.7)
22.7
(72.9)
16.2
(61.2)
11.3
(52.3)
21.54
(70.78)
தாழ் சராசரி °C (°F) 2.7
(36.9)
5.5
(41.9)
10.4
(50.7)
15.3
(59.5)
19.9
(67.8)
24.5
(76.1)
24.8
(76.6)
23.6
(74.5)
21.6
(70.9)
14.5
(58.1)
7.5
(45.5)
3.3
(37.9)
14.47
(58.04)
பொழிவு mm (inches) 58
(2.28)
56
(2.2)
68
(2.68)
44
(1.73)
38
(1.5)
37
(1.46)
237
(9.33)
236
(9.29)
92
(3.62)
23
(0.91)
16
(0.63)
36
(1.42)
941
(37.05)
ஆதாரம்: Climate-Data.org, altitude: 497m[24]

பொருளாதாரம்

தொகு

சுற்றுலாத் துறை

தொகு
 
இரட்டைத்தலை கழகு தூபி, தட்சசீலம், கிமு 100க்கு முந்தையது. உலகப் பாரம்பரியக் களம்

இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நகரம் பன்னாட்டு பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாக உள்ளதால், பன்னாட்டு பௌத்த சமயப் பயணிகளின் வருகையால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது. [25] இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. [26]

தட்சசீல நகரத் தொல்பொருட்கள்

தொகு


 
தட்சசீல அகழாய்வில் கிடைத்த இந்தோ கிரேக்கர்களின் தொல்பொருள் கலைப்பொருட்கள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.
  2. Scharfe, Hartmut (2002). Handbook of Oriental Studies. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004125568.
  3. 3.0 3.1 Raymond Allchin, Bridget Allchin, The Rise of Civilization in India and Pakistan. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1982 p.314 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 052128550X ("The first city of Taxila at Hathial goes back at least to c. 1000 B.C.")
  4. Davis, Richard H. (2014). The "Bhagavad Gita": A Biography. Princeton University Press. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400851973. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  5. Krishnan, Bal (1978). Kurukshetra: Political and Cultural History. B.R. Publishing Corporation. p. 50. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
  6. Needham, Joseph (2004). Within the Four Seas: The Dialogue of East and West. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-36166-4.
  7. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004). A History of India (4th ed.). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32919-1. In the early centuries the centre of Buddhist scholarship was the University of Taxila.
  8. Balakrishnan Muniapan, Junaid M. Shaikh (2007), "Lessons in corporate governance from Kautilya's அர்த்தசாஸ்திரம் in ancient India", World Review of Entrepreneurship, Management and Sustainable Development 3 (1):

    "Kautilya was also a Professor of Politics and Economics at Taxila University. Taxila University is one of the oldest known universities in the world and it was the chief learning centre in ancient India."

  9. Radha Kumud Mookerji (2nd ed. 1951; reprint 1989), Ancient Indian Education: Brahmanical and Buddhist (p. 478), Motilal Banarsidass Publ., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0423-6:

    "Thus the various centres of learning in different parts of the country became affiliated, as it were, to the educational centre, or the central university, of Taxila which exercised a kind of intellectual suzerainty over the wide world of letters in India."

  10. Radha Kumud Mookerji (2nd ed. 1951; reprint 1989), Ancient Indian Education: Brahmanical and Buddhist (p. 479), Motilal Banarsidass Publ., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0423-6:

    "This shows that Taxila was a seat not of elementary, but higher, education, of colleges or a university as distinguished from schools."

  11. "Taxila". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  12. UNESCO World Heritage Site, 1980. Taxila: Multiple Locations. Retrieved 13 January 2007.
  13. "Taxila, ancient city, Pakistan". Encyclopædia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  14. J. W. McCrindle, The Invasion of India by Alexander the Great as Described by Arrian, Q. Curtius, Diodorus, Plutarch and Justin, Westminster, Constable, 1893, pp.343-344.
  15. 15.0 15.1 Raymond Allchin, Bridget Allchin, The Rise of Civilization in India and Pakistan. Cambridge University Press, 1982 p.127 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 052128550X
  16. Centre, UNESCO World Heritage. "Taxila". whc.unesco.org.
  17. Scharfe, Hartmut (2002). Education in Ancient India. Brill Academic Publishers. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12556-6.
  18. "History of Education", Encyclopædia Britannica, 2007.
  19. Mohan Pant, Shūji Funo, Stupa and Swastika: Historical Urban Planning Principles in Nepal's Kathmandu Valley. NUS Press, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971693720, citing Allchin: 1980
  20. Thapar, Romila (1997) [1961]. Aśoka and the Decline of the Mauryas. ஆக்சுபோர்டு: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563932-4.
  21. Trautmann, Thomas R. (1971), Kauṭilya and the Arthaśāstra: a statistical investigation of the authorship and evolution of the text, Brill
  22. Needham 2004.
  23. Marshall 1975:86
  24. "Climate: Taxila - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 14 June 2017.
  25. "PTDC to organize Buddhists’ conference to promote tourism". Pakistan Today. 11 March 2017. https://www.pakistantoday.com.pk/2017/03/11/ptdc-to-organize-buddhists-conference-to-promote-tourism/. பார்த்த நாள்: 1 June 2017. 
  26. "Tourism industry picking up as law and order situation improved". Aaj TV. 24 January 2017. http://aaj.tv/2017/01/tourism-industry-picking-up-as-law-and-order-situation-improved/. பார்த்த நாள்: 1 June 2017. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Taxila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சசீலம்_(நகரம்)&oldid=4060250" இலிருந்து மீள்விக்கப்பட்டது