விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 28
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெப்ரவரி 28: தேசிய அறிவியல் நாள் (இந்தியா)
- 1867 – வத்திக்கானுக்கான தூதர்களுக்கான நிதிகளை அமெரிக்க காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
- 1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் (படம்) வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.
தி. ஜானகிராமன் (பி. 1921) · சௌந்தரா கைலாசம் (பி. 1927) · செங்கை ஆழியான் (இ. 2016)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 27 – பெப்பிரவரி 29 – மார்ச்சு 1