விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 29, 2008

தம்புள்ளை பொற்கோவிலின் அமர்ந்த நிலை புத்தர் சிலை

இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பொற்கோவிலின் அடிவாரத்தில் ஏ 9 பெருந்தெருவையொட்டி அமைந்துள்ள புத்தரின் சிலையும் பௌத்த நூதனசாலை கட்டிடமும். அமர்ந்த நிலையில் பொற்கோவில் கட்டிடத்தின் மேல் அமைந்திருக்கும் கௌதம புத்தரின் சிலை 2001 ஆண்டு அமைக்கப்பட்டது. உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள மலையுச்சியில் இருக்கும் கி.மு. 700 காலத்தில் இருந்து பாவனையிலிருக்கும் குகைகளை பார்க்கச் செல்லும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் விதத்தில் இது அமைக்கப்பட்டது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்