விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 3, 2024

உலகின் மிகப் பெரிய தேசியப் பூங்காவும் பாதுகாக்கப்பட்ட பகுதியுமான வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்காவிலுள்ள ஒரு பனிமலை. பனியாறு, பனியடுக்கு போன்றவற்றில் ஏற்படும் பனித் தகர்வு செயல்முறையினால், அவற்றிலிருந்து திடீரென உடைந்து, பிரிந்து செல்லும் பெரும்பகுதி பனிக்கட்டியை மலைபோலக் கொண்ட அமைப்பாகும். இந்த பனிமலைகள் திறந்த நீர்நிலைகளில் தாமாக மிதந்தபடி இருக்கும்.

படம்: Rita Willaert
தொகுப்பு · சிறப்புப் படங்கள்