விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 17, 2012
- ஒரும எண் முறைமையில் எட்டானது பல்வேறு முறைகளில் (படம்) எழுதப்படுகிறது.
- 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.
- தோம்பு என்பது இலங்கையை போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் ஆண்ட காலத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலாகும்.
- 2.5 மெகா வாட் மின் திறனும் 205 மீட்டர்கள் உயரமும் கொண்ட பியூகர்லண்டர் காற்றுச் சுழலி என்பது உலகிலுள்ள உயரமான காற்றுச் சுழலி ஆகும்.
- கிருதி இசை வடிவங்களில் மிகச் சிறந்ததும் அரங்கிசை வகைகளில் மிக முக்கியமானதுமாகும்.