விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 24, 2012
- சப்பானிய சிலந்தி நண்டின்(படம்) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.
- கணியர் என்பவர்கள் பண்டைய தமிழகத்தின் சோதிடர்களும், வானியலாளர்களும் ஆவர்.
- உலகின் உயரமான கட்டிடம் துபாயிலுள்ள 818 மீ (2,684 அடி) உயரமுடைய புர்ஜ் கலிஃபா ஆகும்.
- விண்மீன் பேரடைகளின் இடையிலிருக்கும் வெற்றுவெளியில் 1 கன மீட்டர்களுக்கு ஒரு அணுவே காணப்படும்.
- சுவாதித் திருநாள் ராம வர்மா 400 இற்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக, இந்துத்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார்.