விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகசுட்டு 9, 2009
- ஒவ்வொரு 10 000 தொழிலாளர்களுக்கும் 295 தானியங்கிகள் யப்பானில் பயன்பாட்டில் உண்டு.
- தாராண்மியவாதம் (Libertarianism) என்பது அரசு மிகச் சிறிதாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு பொருளாதார அரசியல் தத்துவம்.
- உலகில் 35% வீழ்த்தப்படும் மரங்கள் காகித உற்பத்திக்காகப் பயன்படுகின்றன.
- 2008 ம் ஆண்டில் உலகில் பதியப்பட்ட மொத்த (163,800) ஆக்கவுரிமைகளில் (patents) 32.7 விழுக்காடு (53,521) ஐக்கிய அமெரிக்காவினால் செய்யப்பட்டவை.
- 1586 ம் ஆண்டு ஆண்டிறீக்குப் பாதிரியாரால் அச்சுப் பதிப்பாக்கி வெளியிடப்பட்ட அடியார் வரலாறு என்னு நூல் தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலாகக் கருதப்படுகிறது.