விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 15, 2012
- தமிழ் நாட்டின் மாநில விலங்கு வரையாடு. (படம்)
- வேதிக் குறியீடு என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.
- மெய்நிகர் யாழ்ப்பாணம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இடங்களை அகலப் பரப்புக் காட்சிகளாகத் தரும் இணையத்தளம் ஆகும்.
- அகணிய உயிரி என்பது ஒரு குறிப்பிட்ட பூகோளக பகுதிக்குள்ளோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள்ளோ வாழும் ஒரு உயிரியாகும்.
- இந்து மத பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம்.