விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 28, 2013

  • கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது நடுநிலக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது.
  • திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை 200க்கும் மேற்பட்ட பதிப்புகளாகப் பல வடிவங்களில், முப்பதுக்கும் அதிகமான பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
  • பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
  • கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.
  • நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார்.