விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 11, 2012
- பொதுநலவாய நாடுகள் (படம்) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
- சாற்றுக்கவி என்பது முற்காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதை.
- உலகின் முதல் அணுகுண்டு சோதனை டிரினிடி எனக் குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
- சித்திரைத் திருவிழா தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
- மார்ட்டின் லூதர் கிங்கை நினைவு கூறும் வகையில் அவரது பிறந்த நாள் ஆண்டு தோறும் மார்ட்டின் லூதர் கிங் நாள் ஆக ஐக்கிய அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.