விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 14, 2014
- உலகத் தெலுங்கு மாநாட்டின் (ప్రపంచ తెలుగు మహాసభలు) (படம்) முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 இல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், மூன்றாம் மாநாடு 1990 ஆம் ஆண்டு மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு திருப்பதியிலும் நடைபெற்றன.
- இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில், அலை-துகள் இருமை அல்லது அலைகளின் இருமை நிலை (Wave Particle Duality ) என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) அலை போன்ற தன்மையும், துகள் போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற கருத்துரு ஆகும்
- இருபாலுயிரி (hermaphrodite) அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம்.
- உலகில் 5% மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கா, உலகின் 25% கைதிகளைக் கொண்டு, அதிக நபர்கள் சிறையில் இருக்கும் நாடாக விளங்குகிறது.
- யூசுப் சுலைகா காப்பியம் என்பது 1957 ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்ட, திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபியின் கதையை மையமாகக் கொண்ட ஓர் இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும்.