எந்த ஐரோப்பிய, குடியேற்றவாத, கிறித்தவ அரனைச் கொண்ட நாடுகள் அமெரிக்க நிலப்பரப்புக்களைக் "கண்டுபிடித்தனவோ", அவற்றுக்கே அந்த நிலங்கள் அல்லது நாடுகள் சொந்தம் என்று நிலைநாட்டுகின்ற கண்டுபிடிப்புச் சித்தாந்தம் (Discovery doctrine), இன்றும் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் முன்னிறுத்தப்படும் ஒர் அனைத்துலகச் சட்டக் கருத்துரு ஆகும்.