விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 25, 2012
- சறுக்கும் எறும்புகள் (படம்) என்பவை மரத்தில் இருந்து கீழே விழுகையில் தங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வல்ல எறும்புப் பேரினம்.
- ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்ட வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை, இந்தியா உட்பட பல பொதுநலவாய நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
- உழவாரப் பணி என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.
- சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுக்க கருநாடக இசைக் கச்சேரிகள் நடக்கும் நிகழ்வு டிசம்பர் இசை விழா என்றழைக்கப்படுகிறது
- ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்ததில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் இருக்குமென அவகாதரோவின் விதி கூறுகிறது.