அவகாதரோவின் விதி

அவகாதரோவின் விதி அல்லது அவகாட்ரோ விதி (Avogadro's law) இத்தாலியைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் அமேடியோ அவகாதரோ முன்மொழிந்த ஒரு வளிம விதியாகும்.[1][2] ஒரே வடிவுடைய கலனில் அடைத்துவைக்கப்பட்ட ஒரே கொள்ளளவுள்ள (சம பருமனுள்ள) வெவ்வேறு வாயுக்கள் ஒரே வெப்பநிலையில், ஒரே அழுத்தத்தில் இருக்கும் போது அதன் அணு மூலக்கூறுகள் ஒத்த எண்ணிக்கையில் (சமஅளவு எண்ணிக்கையில்) இருக்கும் என்று கூறினார் அவகாதரோ.[3] இவரது இந்தக் கண்டுபிடிப்பு அவரது பெயரிலேயே அவகாதரோவின் விதி என்று அறியப்படுகிறது.

அவகாதரோவின் விதி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:[4]

இங்கு:

V - வளிமத்தின் கனவளவு
n - வளிமத்தில் உள்ள பொருளின் அளவு
k - விகித மாறிலி

அனைத்து வளிமங்களுக்கும் கருத்தியல் வளிம மாறிலி ஒரே அளவாக இருக்கும் என்பது அவகாதரோவின் விதியின் முக்கிய அம்சமாகும். அதாவது,

இங்கு:

p - வளிமத்தின் அமுக்கம்
T - வளிமத்தின் வெப்பநிலை (கெல்வினில்)

கருத்தியல் வளிம விதி தொகு

மேலே தரப்பட்ட சமன்பாட்டில், R என்பதை விகித மாறிலியாகக் கொண்டால், பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்:

 

இச்சமன்பாடு கருத்தியல் வளிம விதி என அழைக்கப்படுகிறது.

பயன்கள் தொகு

  1. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
  2. வாயுச்சேர்மங்களின் மூலக்கூறு வாய்பாட்டைக் கணக்கிட உதவுகிறது.
  3. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை உருவாக்குகிறது.
  4. கேலூசக்கின் விதியை தெளிவாக விளக்குகிறது.
  5. திட்ட வெப்ப அழுத்த நிலையில் வாயுவின் மோலார் பருமனைக் கணக்கிட உதவுகிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

  • தமிழ்நாடு படநூல் கழகம் 10 வகுப்பு அறிவியல்
  • Physical Chemistry by Puti and Sharma
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாதரோவின்_விதி&oldid=3541945" இருந்து மீள்விக்கப்பட்டது