விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 11, 2012
- நொதுமி விண்மீன்கள் வெளியிடும் துடிப்பலைகளை(படம்) வானியலார் கண்டறியும் முன், அவற்றை வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பும் செய்திகள் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருந்தனர்.
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.
- காற்பந்தாட்டத்தில் இரட்டை என்பது ஒரு காற்பந்தாட்ட அணி அந்நாட்டின் கூட்டிணைவு மற்றும் அதன் முதன்மையான கோப்பை ஆகிய இரண்டையும் ஒரே பருவத்தில் வெல்வதைக் குறிக்கும்.
- இந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் ஆகும்.
- இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் இறோம் சர்மிளா ஒவ்வோர் ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வருகிறார்.