ஐரோம் சர்மிளா
ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வந்தது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].
ஐரோம் சானு சர்மிளா | |
---|---|
கோழிக்கோட்டில் விருது வழங்கும் விழாவில் ஐரோம் சர்மிளா | |
பிறப்பு | மார்ச்சு 14, 1972 கொங்பால், இம்பாலா, மணிப்பூர், இந்தியா |
பணி | மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் |
அறியப்படுவது | ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கு எதிரான உண்ணாநோன்பு |
பெற்றோர் | ஐரோம் சி நந்தா (தந்தை) இரோம் ஓங்பி சக்தி (தாய்) |
ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.[4]
உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு
தொகுநவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.[5][6] இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது.[7] 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.[6]
நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.[8] அவரது உடன்பிறப்பு ஐரோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.[9] போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும்.[5] சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.[5][8]
உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.[9] அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, நாசி மூலம் குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர்.[10] இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து ஐரோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.[9][11]
தேர்தல்
தொகுமக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா நிறுவினார்.[12]. 2017 அன்று நடக்கும் தேர்தலில் ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார்[13] இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய சர்மிளா ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் வெறும் 90 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்தார்[14] ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்[15]
மேற்கோள்
தொகு- ↑ Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.
- ↑ "Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.
- ↑ Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.
- ↑ (ஆகத்து 9, 2016). "Irom Sharmila ends 16-year fast". (Web link). Retrieved on ஆகத்து 9, 2016.
- ↑ 5.0 5.1 5.2 Nilanjana S. Roy (8 February 2011). "Torchbearers for Victims in a Violent Land". New York Times. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ 6.0 6.1 Rahul Pathak (6 August 2004). "Why Malom is a big reason for Manipur anger against Army Act". IndianExpress.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ Malom Massacre
- ↑ 8.0 8.1 Shoma Chaudhury (5 December 2009). "Irom And The Iron In India's Soul". Tehelka. Archived from the original on 22 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ 9.0 9.1 9.2 "Manipur fasting woman re-arrested". BBC News. 9 March 2009. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
- ↑ Section 309 in The Indian Penal Code, 1860
- ↑ "Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Irom Sharmila to marry after Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Fight against AFSPA: Sharmila says she has changed her strategy". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு14 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இரோம் ஷர்மிளா விடுதலையாக வாய்ப்பு
- 14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டக்காரரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- விடுதலைக்குப் பிறகும் உண்ணாவிரதத்தை தொடரும் ஐரோம் ஷர்மிளா: மக்கள் இயக்கமாக மாற்ற விருப்பம்
- உண்ணாவிரதத்தை தொடரும் சர்மிளா : கோர்ட் விடுவித்தும் வீட்டிற்கு செல்ல மறுப்பு
- 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்துக்கு இரோம் சர்மிளா முற்றுப்புள்ளி: தேர்தலில் போட்டியிட முடிவு
- SHARMILA A SYMBOL OF PEACE AND AHIMSA
- An interview and detailed report on Irom Sharmila- A living Gandhi from North East
- Babloo Loitongbam, North-east India Experience
- A write-up on Irom Sharmila, with video clips, IMOW பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம்
- My Body My Weapon, a short documentary on Irom Sharmila by Kavita Joshi
- Irom's Iron in the Soul, an interview with Irom Sharmila பரணிடப்பட்டது 2010-08-09 at the வந்தவழி இயந்திரம்
- The Unlikely Outlaw, cover story on Irom Sharmila பரணிடப்பட்டது 2010-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Daughter of peace, cover story on Irom Sharmila
- Enacting The Irom Legacy
- I am eager to live: Sharmila