விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 5, 2012
- இராஜபாளையம் நாய்கள் (படம்) பிற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டவை.
- இப்போது மறைந்துவிட்ட ஏரம்பம் என்ற நூல் மிகப்பழைய தமிழ் கணக்கியல் நூலென கருதப்படுகிறது.
- இலண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம் இரு குழந்தைகளுக்குத் தாயானவர்.
- தோம்பு என்பது இலங்கையைப் போத்துக்கீசரும் பின்னர் ஒல்லாந்தரும் ஆண்ட காலங்களில், உருவாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருந்த நிலவுடைமைப் பட்டியலைக் குறிக்கும்.
- கியார்கு கேன்ட்டர் என்ற கணிதவியலாளரே மெய்யெண்களை எண்ணவியலா முடிவிலிகள் என்று நிறுவும் கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறையை உருவாக்கியவர்.