விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/நவம்பர் 14, 2010

  • வெள்ளை ரோசா (படம்) என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
  • எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
  • மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும்.
  • இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.
  • திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது.