விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 2, 2012
- இளவட்டக்கல்லைத் (படம்) தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் இளைஞருக்கு தம் பெண்களை மணமுடித்துத் தரும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.
- இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் வைப்புத்தொகையை இழப்பர்.
- முதல் நிலை ஆள்களப் பெயர் என்பது இணையத்தில் நிருவாக அதிகாரம், கட்டுப்பாடு போன்வற்றை வரையறுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட பின்னொட்டு சரம் ஆகும்.
- உதகமண்டலம் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.
- மாண்டரின், எசுப்பானியம், ஆங்கிலம் ஆகியவை முறையே உலகத்தில் அதிகம் நபர்கள் பேசும் முதல் மூன்று மொழிகளாக உள்ளன.