விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2021

ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்பட்டவுடன் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்.


ஆகத்து 8, 2021
Jingangjing.jpg

செப்டம்பர் 19, 2021
Melania Trump Official Portrait crop.jpg
  • மெலனியா திரம்ப் (படம்) வெளிநாட்டில் பிறந்த இரண்டாவது அமெரிக்க முதல் பெண்மணியாவார்.
  • மார்கரெட் கோர்ட் டென்னிசில் ஓப்பன் காலம் தொடங்கிய பின் ஒரே ஆண்டில் (1970) கிராண்ட் சிலாமின் நான்கு கோப்பைகளையும் வென்ற முதலாம் வீராங்கனை ஆவார்.
  • எட்மோனியா லூவிசு பன்னாட்டுப் புகழும் உலக நுண்கலைகளில் பெயரும் பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்க, அமெரிக்க தொல்குடியினர் மரபில் முதல் பெண்மணி ஆவார்.
  • பண்பாட்டுப் படுகொலை எனும் கருத்தியல் 1944 ஆம் ஆண்டில் ரபேல் லெம்கின் எனும் வழக்கறிஞரால் இனப்படுகொலையிலிருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டது.

நவம்பர் 7, 2021
Wildebeest-during-Great-Migration.JPG
  • செரெங்கெட்டி இடப்பெயர்வு (படம்) ஒவ்வோராண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்காவின் செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு லட்சக்கணக்கான விலங்குகள் இடம் பெயரும் ஒரு நிகழ்வு.
  • புழுப்பாம்புகள் அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன.
  • 188 மீட்டர் உயரம் உடைய தக்கீசு அணை ஆப்பிரிக்காவிலேயேஉயரமான அணையாகும்.
  • என்ஹெடுவானா என்பவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றவர் ஆவார்.