ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்
ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ஹரி சிங் என்பவரால், ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்கும் பொருட்டு 26 அக்டோபர் 1947இல் கையொப்பமிட்ட சட்டபூர்வமான ஆவணம் ஆகும்.[1][2][3]
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தம் | |
---|---|
ஒப்பந்த வகை | இணைப்பு ஒப்பந்தம் |
கையெழுத்திட்டது | 26 அக்டோபர் 1947 |
இடம் | ஸ்ரீநகர்/தில்லி |
முத்திரையிட்டது | 27 அக்டோபர் 1947 |
நடைமுறைக்கு வந்தது | 27 அக்டோபர் 1947 |
நிலை | இந்தியாவின் தலைமை ஆளுநர் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தல் |
முடிவுக்காலம் | நிலைத்த உடன்பாடு |
கையெழுத்திட்டோர் | மகாராஜா ஹரி சிங் மவுண்ட்பேட்டன் பிரபு |
தரப்புகள் | ஜம்மு காஷ்மீர் இராச்சியம் இந்தியா |
வைப்பகம் | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
1947இந்திய விடுதலை சட்டத்தின் படி, மகாராஜா ஹரி சிங் தனது ஜம்மு காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதை தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்.[4][5]
இந்திய கவர்னர் ஜெனரலராக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு 27 அக்டோபர் 1947 அன்று, ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தார்.[6] இந்த உடன்படிக்கையால் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.[7][8]
ஜம்மு காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் செய்து கொண்ட நாளான அக்டோபர் 26ஆம் தேதியை, ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.[9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Instrument of Accession of Jammu and Kashmir State dated 26 October, 1947
- ↑ Justice A. S. Anand, The Constitution of Jammu & Kashmir (5th edition, 2006), page 67
- ↑ Kashmir, Research Paper 04/28 by Paul Bowers, House of Commons Library, United Kingdom., page 46, 2004-03-30
- ↑ Patricia Gossman, Vincent Iacopino, Physicians for Human Rights,”The crackdown in Kashmir” (1993),page 10
- ↑ Bruce B. Campbell, Arthur David Brenner,” Death squads in global perspective: murder with deniability”(2002),page 271
- ↑ Thomas Bruce Millar,” The Commonwealth and the United Nations ”( 1967),page 26
- ↑ Sumit Ganguly, “Conflict unending: India-Pakistan tensions since 1947”(2001),page 154
- ↑ "KASHMIR QUESTIONS by A.G. NOORANI". Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-16.
- ↑ "Jammu all set to celebrate accession day". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2007-12-31.
வெளி இணைப்புகள்
தொகு- Page 1 of the instrument
- Page 2 of the instrument
- Original Accession Document
- The full instrument in text mode. பரணிடப்பட்டது 2019-03-17 at the வந்தவழி இயந்திரம்
- Proclamation of May 1, 1951 on Jammu & Kashmir Constituent Assembly by Yuvraj (Crown Prince) Karan Singh from the Official website of Government of Jammu and Kashmir, India பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம்
- Conflict in Kashmir: Selected Internet Resources by the Library, University of California, Berkeley, USA; University of California, Berkeley Library Bibliographies and Web-Bibliographies list
- Andrew Whitehead's book A Mission in Kashmir, which challenges the official account of the signing of the accession document