விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 19, 2008

மென்மி, அல்லது லெப்டான், அல்லது லெப்டோன் (Lepton) என்பது அணுக்கூறான அடிப்படைத் துகள்கள் சிலவற்றின் பொதுக் குடும்பப்பெயர். எதிர்மின்னி (எலக்ட்ரான்), மியூவான், டௌவான் (டௌ துகள்), மற்றும் இத் துகள்களின் நியூட்ரினோக்களும் (நுண்நொதுமிகளும்) மென்மிகள் அல்லது லெப்டான்கள் எனப்படும் அடிப்படைத் துகள் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த மென்மிகள் யாவும் தற்சுழற்சி எண் 12 கொண்டவை. இந்த மென்மிகள் அணுக்கருவின் உள்ளே இயங்கும் அணுக்கரு வன்விசையை போல் வலுவான விசையுடன் இயங்குபவை அல்ல.


ஹபிள் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி (Hubble Space Telescope) டிஸ்கவரி விண்வெளி ஓடத்தினால் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி ஆகும். அமெரிக்க வானியலாளரான எட்வின் ஹபிள் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. இது முதலாவது விண்வெளித் தொலைநோக்கி அல்ல எனினும் ஹபிள் மிகப் பெரிய தொலைநோக்கிகளுள் ஒன்றும், மிகச் சிறந்ததும் ஆகும். அத்துடன் இது ஒரு ஆய்வுக்கருவி மட்டுமல்லாமல், வானியலுக்கான மக்கள் தொடர்பு நடவடிக்கைகளிலும் பேருதவியாக அமைந்தது.


உங்களுக்குத் தெரியுமா

  • நீலகிரியில் வாழும் தோடர் இனமக்களின் வாழ்வில் எருமைகள் பெற்றுள்ள சிறப்பு காரணமாக இவர்களை மாந்தவியலாளர்கள் எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.
  • அமெரிக்க நாட்டில் உள்ள டென்வர் நகரம் கடல்மட்டத்தில் இருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் இதனை மைல் உயர நகரம் என்றும் அழைப்பர்.
  • வாழும் பறவைகளுள் மிகப்பெரியது தீக்கோழி (Struthio camelus) ஆகும்.
  • உலகிலே அதிக மக்கள் தாய் மொழியாகக் கொண்ட மொழி சீன மொழி.
  • இன்று கிடைக்கப்படும் மிகப் பழைய (2300 வருடங்கள்) தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.