விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 30, 2008

மெம்ரிஸ்டர் (Memristor) அல்லது நினைவுகொள் மின்தடை என்பது ஒரு புது வகையான இரு-மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள "ஹியூலிட் பாக்கார்டு" நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். ஸ்டான்லி வில்லியம்சு என்பவரும் அவருடைய உடன் ஆய்வாளர்களும் அறிவித்தார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் முன்பு, மின்னியல் வரலாற்றில், மின்தடையம், மின்தூண்டி, மின்தேக்கி ஆகிய மூன்றே அடிப்படை மின் உறுப்புகளாக இருந்தன. இந்த நினைவுகொள் மின்தடை என்னும் புதிய உறுப்பானது ஓர் அடிப்படையான நான்காவது உறுப்பாகும்.


மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரபூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா