விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 9, 2008

உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கை என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. பொதுவாக இப் படிவளர்ச்சி மாற்றங்கள் இரு பெரும் வழிகளில் உந்தப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்தேர்வு என்று பெயர். இரண்டாவது உந்துதலாக (ஏதுவாக) அமைவது தன்னேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது மரபணு பிறழ்வு நகர்ச்சி (Genetic drift) என்று பெயர்.


ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு ஆகும். இந்நாடு எல்லாப்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் நடு கிழக்கு நாடாகவும் தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்பட்டுவதுண்டு. மேற்கே ஈரானை எல்லையாகவும் தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானையும் வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்பனவற்றையும் கிழக்கில் சீனாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாக செல்கிறது.


உங்களுக்குத் தெரியுமா