விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/மேம்பாடு தேவை 2014
- பல மூலங்களில் இருந்து உசாத்துணை அமைவது சிறப்பு --AntonTalk 18:54, 5 மே 2014 (UTC)
- புலியூர்க் கேசிகனார் பற்றிய முழுமையாக எழுதப்பட்ட முதற்கட்டுரையே இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். விளம்பரமின்றி அரும்பணியாற்றிய அவரைப் பற்றி பலரும் எழுதவில்லை. எனவே இக்கட்டுரைக்கு பலமூலங்கள் கிடைப்பது அரிது. மேலும் 2014 ஏப்ரல் 26ஆம் நாள் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மணியம்மையார் கட்டுரை ஒரே மூலத்தைக்கொண்டதாகத்தான் இருக்கிறது. ஆனால் இக்கட்டுரையோ 5 மூலங்களைக்கொண்டு இருக்கிறது. தவிர, இதே பக்கத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள் என்னும் பத்தியில் இப்படியொரு தகுதி கொடுக்கப்படவில்லை. எனவே, அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும் இக்கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். --பொன்னிலவன் (பேச்சு) 12:14, 12 மே 2014 (UTC)
- வெளியிடலாம்.--Kanags \உரையாடுக 13:02, 12 மே 2014 (UTC)
- //அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும் இக்கட்டுரையை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம்// இதுதானா முக்கிய காரணம்? --AntonTalk 14:51, 12 மே 2014 (UTC)
- அன்ரன், உங்களின் துலங்கள் பொருளற்றதாக இருக்கிறது. கட்டுரை முழுமையாக இருக்கிறது; 5 மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களைக்கொண்டதாக இருக்கிறது; தமிழ்த் தொண்டர் ஒருவரைப் பற்றியது ஆகிய தகுதிகளால் அது முதற்பக்கத்தில் இடம்பெறத்தக்கது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு அரிஅரவேலன் முயற்சியைப் பாராட்டும் நோக்கில் எழுதப்பட்ட ஒரு வரியை எடுத்துக்கொண்டு "இதுதானா முக்கியக் காரணம்?" என்பது ஏதோ உள்நோக்கம் கற்பிப்பதைப்போல இருக்கிறது. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் முதற்பக்கத்தில் இடம்பெறுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதனை ஏற்கனவே ஒருமுறை நீங்கள் இப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அம்மனநிலையின் தொடர்ச்சியாகவே நீங்கள் இக்கட்டுரைக்கு முட்டுக்கட்டை போட முனைகிறீர்கள் என நான் எழுதினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் தற்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் துலங்கள். --பொன்னிலவன் (பேச்சு) 04:07, 13 மே 2014 (UTC)
- விடயத்திற்கு வெளியில் உரையாட வேண்டாம். அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும்.... என்பதும் அவ்வாறானதே. இக்கட்டுரை ஏற்புடையதா என்பதை மட்டும் கலந்துரையாடவும். --AntonTalk 17:50, 16 மே 2014 (UTC)
- அன்ரன், இது பள்ளிக்கூடம் அன்று; நீங்கள் ஆசிரியரும் மற்றவர்கள் மாணவரும் அல்லர். எனவே எல்லாவற்றிலும் குறைகண்டுபிடிக்க முனையாதீர்கள்.வாழ்க்கைக்குறிப்புகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதில்லை என்பதில் நீங்கள் முனைப்பாக இருக்கிறீர்கள். அதற்காக ஆவன்வற்றை எல்லாம் செய்கிறீர்கள். செய்யுங்கள்! செய்யுங்கள்!! --பொன்னிலவன் (பேச்சு) 08:57, 20 மே 2014 (UTC)
- விடயத்திற்கு வெளியில் உரையாட வேண்டாம். அரிஅரவேலன் அரிதின் முயன்று தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கும்.... என்பதும் அவ்வாறானதே. இக்கட்டுரை ஏற்புடையதா என்பதை மட்டும் கலந்துரையாடவும். --AntonTalk 17:50, 16 மே 2014 (UTC)
- அன்ரன், உங்களின் துலங்கள் பொருளற்றதாக இருக்கிறது. கட்டுரை முழுமையாக இருக்கிறது; 5 மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களைக்கொண்டதாக இருக்கிறது; தமிழ்த் தொண்டர் ஒருவரைப் பற்றியது ஆகிய தகுதிகளால் அது முதற்பக்கத்தில் இடம்பெறத்தக்கது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு அரிஅரவேலன் முயற்சியைப் பாராட்டும் நோக்கில் எழுதப்பட்ட ஒரு வரியை எடுத்துக்கொண்டு "இதுதானா முக்கியக் காரணம்?" என்பது ஏதோ உள்நோக்கம் கற்பிப்பதைப்போல இருக்கிறது. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் முதற்பக்கத்தில் இடம்பெறுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதனை ஏற்கனவே ஒருமுறை நீங்கள் இப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அம்மனநிலையின் தொடர்ச்சியாகவே நீங்கள் இக்கட்டுரைக்கு முட்டுக்கட்டை போட முனைகிறீர்கள் என நான் எழுதினால் எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் தற்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் துலங்கள். --பொன்னிலவன் (பேச்சு) 04:07, 13 மே 2014 (UTC)
பயனர்:பொன்னிலவன் புலியூர் கேசிகன் நூல்கள் அனைத்தும் தமிழ் இணையக் கல்விக்கழக வளைதளத்தில் கிடைக்கும். அந்த நூல் முன்னுரையில் புலியூர் கேசிகனார் பற்றிய குறிப்புகளை எடுத்து கட்டுரையையும் விரிவுப்படுத்தலாம். அந்த முன்னுரைகள் அனைத்தையும் மேற்கோளாகவும் கொடுக்கலாம். ஒரே நூல் மேற்கோளாக தந்தால் அதில் ஒருவரின் கருத்து மட்டுமே இருக்கும். விதி இல்லை என்றாலும் பெரும்பாலும் இதை தவிர்ப்பது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:16, 16 மே 2014 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன் தமிழ் இணையக் கல்விக்கழக வளைதளத்தில் மட்டுமின்றி நூலகங்களில் இருக்கும் புலியூர் கேசிகன் நூல்களையும் பார்த்துவிட்டேன். அவற்றில் இவ்வளவுதான் தகவல் இருக்கிறது. அரிஅரவேலன் அப்பணியை செவ்வனே செய்திருக்கிறார். இயன்றால் தாங்கள் இதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டுகிறேன். --பொன்னிலவன் (பேச்சு) 08:57, 20 மே 2014 (UTC)
புலியூர்க் கேசிகன் கட்டுரையின் தரம் ஏற்கனவே முதற்பக்கத்தில் காட்டிய பல கட்டுரைகளின் தரத்துடன் ஒப்பிடத்தக்க வகையிலேயே உள்ளது. கட்டுரைக்குப் பல மூலங்கள் இருப்பது நன்று தான். ஆனால், இது போன்ற எதிர்பார்ப்புகளை முறையாக இணக்க முடிவாக அறிவித்து விட்டு வலியுறுத்துவது நன்று. இது தொடர்பான உரையாடலுக்கு விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#பரிந்துரைகள் தெரிவு குறித்த கருத்து பகுதிக்கு வாருங்கள். இக்கட்டுரையை முதற்பக்கத்தில் காட்ட ஆதரவு அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 12:09, 16 சூன் 2014 (UTC) ---
- குறைந்தது பொருளாதாரப் பயன்களுக்காவது உசாத்துணைகள் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 13:02, 12 மே 2014 (UTC)