விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்
வாழும் மாந்தர்களைப் பற்றி முதற் பக்கக் கட்டுரையாக வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் உண்டு. ஏனைய பயனர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 22:19, 29 திசம்பர் 2010 (UTC)
- ரசிகர்கள் தங்கள் அபிமான “நட்சத்திரங்களை” முதற்பக்கத்தில் கொண்டுவர முயலுவார்கள் :-) என்பதாலா? அல்லது சட்டச் சிக்கல்கள் (அவதூறு பிரச்சனை) ஏற்படும் என்பதாலா?. சர்ச்சையற்ற வாழும் மாந்தரை முதல் பக்கத்தில் கொண்டு வரலாம் என்பது என் கருத்து. --சோடாபாட்டில் 02:47, 30 திசம்பர் 2010 (UTC)
வாழும் மாந்தரை முதற்பக்கத்துக்கு தேர்ந்தெடுக்கும் போது வேண்டாம் என்பதை விட மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அறிவியலாளர்கள் தான் எனக்கு தெரிந்து குறைந்த அளவு சர்ச்சைக்குறியவர்கள் ;) --குறும்பன் 02:59, 30 திசம்பர் 2010 (UTC)
- ஆங்கில விக்கியில் துருவிப் பார்த்தேன். அப்படி ஏதும் கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் இப்படியான கட்டுரைகளை ஓரிருவர் மதிப்பீடு செய்து ஆமோதிப்பது நல்லது.--Kanags \உரையாடுக 03:31, 30 திசம்பர் 2010 (UTC)
- வாழும் மாந்தர்களைப் பற்றிய கட்டுரைகளை முதற் பக்கக் கட்டுரையாக வெளியிடுவதற்காக மதிப்பீடு செய்வதற்கான ஒரு மதிப்பீட்டு வரையறையை வரைந்து அதன் அடிப்படையில் தெரிவுசெய்தால் என்ன? --192.248.66.3 04:00, 30 திசம்பர் 2010 (UTC)
ஏன் எப்போதும் நபர்கள்
தொகுகனக்ஸ், நீங்கள் ஏன் முதற்பக்க கட்டுரை இரண்டிலொன்று நபர் பற்றிய கட்டுரையாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? ஏதேனும் விதியுள்ளதா? இதனால் மற்ற துறை பற்றிய கட்டுரைகள் இடம்பெறுவது குறைவது போல் தெரிகிறதே..!--தென்காசி சுப்பிரமணியன் 17:24, 25 சனவரி 2012 (UTC) +1 -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:24, 28 சனவரி 2012 (UTC)
- விதி ஏதும் இல்லை. எல்லாருக்கும் எல்லா துறையிலும் ஆர்வம் இருக்காது. ஆனால், ஒரு ஆளைப் பற்றி என்றால் கூடுதல் ஆர்வம் வரலாம். முதற்பக்கத்தைப் பலதரப்பட்ட பயனர்களும் காண்பார்கள் என்பதால் தொடர்ந்து ஆட்களைப் பற்றிய கட்டுரைகள் இடுவது ஏற்புடையதே. தொடர்புடைய குறிப்பு: தமிழ்நாட்டுப் பதிப்பகங்களிலும் கூட வாழ்க்கை வரலாறுகளே கூடுதலாக விற்பதாகச் சொல்கிறார்கள்.--இரவி 09:05, 29 சனவரி 2012 (UTC)
- நானே பதில் தர வேண்டும் என்றிருந்தேன். எனது எண்ணத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள் இரவி. பொதுவாக இது ஒரு எழுதப்படாத விதியே. வாழ்க்கை வரலாறுகளில் எமது பண்டைய வரலாறும் பல நாட்டினரின் வரலாறுகளையும் அறிய முடிகிறது. எமது முதற்பக்கத்தில் வெளிவந்துள்ள பலரைப் பற்றியும் எமது இக்காலத்தவர்கள் அறிந்திராதவை. ஆனாலும், வேறு யாராவது எதிர்க் கருத்துகளுடன் வந்தால் இதனைப் பற்றிச் சிந்திக்கலாம். நான் முதற்பக்கக் கட்டுரைகளைப் பொறுப்பெடுத்த போது (யாரும் எனக்குப் பொறுப்புத் தரவில்லை, மாதக்கணக்காக இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததால் நானே பொறுப்பு எடுத்துக் கொண்டேன்:) நானே இந்த விதியை ஏற்படுத்திக் கொண்டேன். மேலும் முதற்பக்கக் கட்டுரைகளைப் பராமரித்து முதற்பக்கத்தில் இடுவதற்கு யாருக்காவது விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள். சூரியாவுக்கு விருப்பம் இருப்பதாக முன்னர் கூறியிருந்தார். அவரது பதிலைக் காணோம்.--Kanags \உரையாடுக 09:22, 29 சனவரி 2012 (UTC)
இதை எதிர்பென்று வைக்கவில்லை. தெரிந்து கொள்வதற்கு கேட்கப்பட்ட கேள்வி. முதற்பக்க கட்டுரைகளுக்கு அடுத்து வாரம் வருவன என்று உங்களுக்கு தெரியுமா போல் ஒரு பக்கம் ஏற்படுத்தினால் இதை எளிமைப்படுத்திவிடலாம் என்று தோன்றுகிறது. நான் மேற்கோள் சேர்ப்பது மற்றும் மொழிபெயர்ப்பது தொடர்பாக உதவ முடியும். உங்களுக்கு தெரியுமாவை எளிதாக சமாளித்து விடலாம். இது பெரியது என்பதால் நிறைய பேர் உதவி தேவை. நீங்கள் எந்த கட்டுரையை அடுத்து வாரத்தில் முதற்பக்கத்திற்கு கொண்டுவரலாம் என்பதை முன்கூட்டியே கூறினால் நன்றாக இருக்கும். 5, 6 கட்டுரைகளை முன்வைத்தால் எப்படியும் இரண்டை விரிவு படுத்திவிடலாம். தமிழக வரலாறு தொடர்பானவை என்றால் என்னால் அதிகம் உதவ முடியும்.
நீங்கள் ரொம்ப நாட்களாக முதற்பக்க இற்றைபடுத்தலின் சோலா பெர்ஃபாமர் என்பதை நான் ஏற்கனவே ஓரளவு கேட்டு அறிந்திருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் 09:39, 29 சனவரி 2012 (UTC)
முதற்பக்கக் கட்டுரைகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டல்
தொகுவரும் வாரங்களில் முதற்பக்கத்தில் இடம்பெற இருக்கும் கட்டுரைகளை முன்கூட்டியே அறிவித்து அதற்கான வார்ப்புருக்களை உருவாக்குவது நன்று. இதன் மூலம் குறிப்பிட்ட கட்டுரைகளை முன்கூட்டியே கவனித்து உரை திருத்தலாம். இதன் மூலம் முதற்பக்கத்தில் இடம்பெறுவதில் மறுப்பு இருந்தாலும் தெரிவிக்கலாம். பரிந்துரைப்பட்டியலில் முன் கூட்டியே இட்டு அதன் பிறகு முதற்பக்கக் கட்டுரையாகத் தேர்ந்தெடுப்பதும் நலம். இவ்வாரம் இடம்பெற்றுள்ள இரண்டு கட்டுரைகளையும் பரிந்துரைப் பட்டியலில் காண முடியவில்லை. இவற்றைச் செய்வதற்குத் உதவி தேவைப்படும் எனில், முதற்பக்க இற்றைப்படுத்தலில் நானும் இணைந்து கொள்கிறேன். நன்றி--இரவி 18:22, 19 பெப்ரவரி 2012 (UTC)
- +1--தென்காசி சுப்பிரமணியன் 09:29, 20 பெப்ரவரி 2012 (UTC)
- இரவி முன்மொழிந்த படியே முதற்பக்கக் கட்டுரைகளை முன்கூட்டியே தெரிவு செய்யலாம். அதற்கான முதற்படிகளை இரவியே ஆரம்பித்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த வாரம் முதலேயே இதனை அமுல் படுத்தலாம். மேலும், இங்குள்ள கட்டுரைகள் பரிந்துரைகளே தவிர, கட்டாயம் அவற்றில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் எழுதப்படவில்லையே.--Kanags \உரையாடுக 09:37, 20 பெப்ரவரி 2012 (UTC)
புரிதலுக்கு நன்றி, சிறீதரன். வரும் நான்கு வாரங்களுக்கான கட்டுரைகளை அறிவிப்பதற்கான பட்டியலை பரிந்துரைப்புப் பக்கத்தில் இட்டுள்ளேன். நான்கு வாரங்கள் முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம் இக்கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் நேரம் கிடைக்கும். பரிந்துரையில் உள்ள கட்டுரைகளை மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், பரிந்துரை என்று ஒரு நடைமுறையும் அதில் ஏற்கனவே 38 பரிந்துரைகளும் இருக்கும் போது அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமாகப் பரிந்துரைத்து வரும் பயனர்களை ஊக்குவிக்கவும், புதிய பயனர்கள் இப்பரிந்துரையை இடவும் தூண்டும். தவிர, முதற்பக்கத்தை இற்றைப்படுத்துவோர் தேர்ந்தெடுக்கக்கூடிய நல்ல கட்டுரைகளையும் முன்பே பரிந்துரையில் இட்டுப் பிறகு வரும் வாரக் கட்டுரையாக அறிவிப்பது ஒரு நல்ல நடைமுறையாக இருக்கும் அல்லவா? ஏற்கனவே உள்ள பரிந்துரைகளில் ஏதேனும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் அவை குறித்த கருத்துகளை மேம்பாடு தேவைப்படும் பரிந்துரைகள் பகுதியில் இடலாம். முதலில் பரிந்துரைத்த பயனர் இக்கருத்துகளை உள்வாங்கி கட்டுரையை மேம்படுத்த வாய்ப்பாக அமையும். இவ்வாறு பின்னூட்டம் பெறாத கட்டுரைகள் ஏதேனும் ஒரு வாரம் இடம்பெறும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு சிறப்புக் கட்டுரை நடைமுறைகளை உருவாக்கிச் செயற்படுத்த நம்மிடையே பங்களிப்பாளர் வளம் இல்லை. அதே வேளை, முதற்பக்கக் கட்டுரையில் இடம்பெறுவது பதக்கம் பெறுவது போன்ற ஒரு பெருமையாகவும் குறுந்தட்டுத் திட்டத்தில் இடம்பெறுவது போன்ற முக்கியத்துவத்தையும் பெறத் தொடங்கி உள்ளதால், சமூகம் வளர வளர வருங்காலத்தில், கட்டுரைகளை முதற்பக்கத்தில் இற்றைப்படுத்தும் பொறுப்பும் இவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையும் தனித்தனியாகவும் அனைவரின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி--இரவி 11:41, 20 பெப்ரவரி 2012 (UTC)
- நல்ல பரிந்துரை, இரவி! இப்படிச் செய்வதே மேம்பட்ட செயற்பாடாக இருக்கும். ஒரு கிழமைக்கு (வாரத்துக்கு) 4-5 கட்டுரைகளே தேவை. எனவே ஒரு 8-10 கட்டுரைகள் பரிந்துரையில் இருப்பது வேண்டும். என்னால் ஆன உதவிகளைச் செய்ய முன்வருகின்றேன்.--செல்வா 23:40, 20 பெப்ரவரி 2012 (UTC)
ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளை அனைவரும் மீணடும் பரிசீலித்து, முடிந்தால் திருத்தங்களைச் செய்து அவற்றில் உள்ள முக்கிய குறைபாடுகளை மட்டும் அந்தந்தத் தலைப்புகளின் கீழ் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். குறைபாடுகள் இல்லாவிட்டால் அவை முதற்பக்கத்தில் வெளியிடத் தகுதியானவை என எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குமரிக்கண்டம் போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளை சரிபார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:15, 21 பெப்ரவரி 2012 (UTC)
- ஆம் கனகு குமரிக்கண்டம் கட்டுரையில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன. சிலவற்றையும் குறித்து வைத்துள்ளேன். ஆனால் இன்னும் பதிவு செய்யவில்லை. இக்கட்டுரையை நான் மேம்படுத்த உதவ முன்வருவேன். ஆனால் உடனே செய்ய இயலாமல் இருக்கலாம்.--செல்வா 03:09, 21 பெப்ரவரி 2012 (UTC)
நாளை..?
தொகுநாளை இடம்பெறப்போகும் 2 முதற்பக்க கட்டுரைகள் எவை?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:31, 3 மார்ச் 2012 (UTC)
- முதற்பக்கக் கட்டுரைகளைச் சேர்ப்பதற்கு யாராவது பொறுப்பெடுப்பீர்களா?--Kanags \உரையாடுக 08:31, 4 மார்ச் 2012 (UTC)
- சிறீதரன், முன்கூட்டியே கட்டுரைகளை அறிவித்து, தொடர்புடைய வார்ப்புருகளை உருவாக்க உதவ விரும்புகிறேன். பெரும்பாலான ஞாயிறுகள் கணினி முன் இருப்பேன். தவறும் போது மட்டும், உரிய வார்ப்புருவை முதற்பக்ககத்தில் இட்டு இற்றைப்படுத்தும் பொறுப்புக்கு யாராவது கூடுதல் பொறுப்பு ஏற்றால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 12:23, 4 மார்ச் 2012 (UTC)
ரவி, நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்யுங்கள். நானும் உதவுவேன். வார்ப்புரு தயாரானால் முதற்பக்கத்தில் இடுவதில் பாலாவோ நானோ உதவலாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:48, 5 மார்ச் 2012 (UTC)
- பயனர் மற்றும் கட்டுரை பேச்சு பக்கங்களில் வார்ப்புரு இடுவதை நான் செய்கிறேன். அதே நேரம் அடுத்த வார 2 கட்டுரைகள் இரண்டையும் கூறிவிடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:52, 5 மார்ச் 2012 (UTC)
- புரிதலுக்கு நன்றி, சிறீதரன். வாரா வாரம் வெவ்வேறு துறைகள் இடம் பெறுமாறு இயன்ற வரை பரிந்துரைகளில் இருந்தே முதற்பக்கக் கட்டுரைகளைத் தெரிவு செய்ய முயல்கிறேன். இது தொடர்பாக, பயனர்களின் கூடுதல் பரிந்துரைகளைப் பெறவும் முயல்வேன். சுப்பிரமணியன், நீங்களும் இப்பணியில் இணைந்து கொள்வதற்கு நன்றி. வரும் வாரக் கட்டுரைகள் அறிவிப்புக்குப் பின், முதற்பக்க வார்ப்புரு உருவாக்கவும் உதவலாம். அதே வேளை, நீங்கள் பரிந்துரைக்கும் கட்டுரைகள் வரும் வாரக் கட்டுரைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான முதற்பக்க வடிவத்தை நேரடியாக வார்ப்புருவிலேயே தந்துவிட்டால் போதுமானதாக இருக்கும்.
வார்ப்புருத் தலைப்புகளில் உள்ள மாதப் பெயர்கள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவின் தோன்றும் மாதப் பெயர்களின் சீர்மை கருதி திரான்சுலேட்டு விக்கி தளத்தில் மாற்றம் செய்துள்ளோம். இது குறித்து முன்பு ஆலமரத்தடியில் உரையாடியுள்ளோம். வார்ப்புருத் தலைப்புகளில் வரும் மாதப் பெயர்களிலும் இதே சீர்மையைப் பின்பற்றுவது குறுந்தட்டுத் திட்டம் போன்றவற்றில் நுட்ப வேலையை இலகுவாக்கும்.
- சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் என்ற பெயர்களைப் பயன்படுத்த வேண்டும்.--இரவி (பேச்சு) 11:06, 15 மார்ச் 2012 (UTC)
மாற்றப்பட்ட பெயர்களை எப்போதிருந்து இடுவது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:15, 15 மார்ச் 2012 (UTC)
- இரவி, உங்கள் மாற்றங்கள் முடிவான மாற்றங்களா, அல்லது மேலும் பயனர்கள் வேறு சொற்களைப் பரிந்துரைக்கும் போது மாற்றுவீர்களா? எது எப்படியாயினும் நீங்கள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி மாற்றிவிட்டீர்கள். விக்கிசெய்தியில் இதன் தாக்கம் முழுமையாகத் தெரிய இரண்டு, மூன்று நாட்களாகலாம். 2006 ஆம் ஆண்டில் இருந்து உருவாக்கிய அனைத்து மாதப் பகுப்புகளும் (ஒன்றிரண்டல்ல, ஆயிரக்கணக்கில்) நீக்கப்பட்டுப் புதிய பகுப்புகள் உருவாக்க வேண்டி வரும். அல்லது விக்கிசெய்திகளில் மட்டும் இந்த மாற்றங்கள் வராமல் செய்ய முடியுமா?--Kanags \உரையாடுக 11:24, 15 மார்ச் 2012 (UTC)
சிறீதரன், நான் எதையுமே மாற்றவில்லை. வரும் வார முதற்பக்கக் கட்டுரைகளுக்கான வார்ப்புருவின் பெயரில் ஏப்பிரல் என்று இட்டிருந்தேன். அதனைத் தென்காசி சுப்பிரமணியன் ஏப்ரல் என மாற்றி இருந்தார். இவ்வாறு வார்ப்புருப் பெயர்கள் சீர்மை இன்றி இருப்பதால் குறுந்தட்டு நிரலாக்கத்தில் சிக்கல் வருவதாக சிறீக்காந்த் முன்பொரு முறை சுட்டிக் காட்டி இருந்தார். இதைத் தான் இங்கு சுட்டிக் காட்டியுள்ளேன். நிரலாக்கத்தை முன்னிட்டு வார்ப்புருத் தலைப்புகளில் உள்ள மாதப் பெயர்களில் சீர்மை வேண்டும் என்பதே நோக்கம். இந்த மாதப்பெயர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது விக்கி சமூகத்தின் முடிவு தான்.--இரவி (பேச்சு) 11:41, 15 மார்ச் 2012 (UTC)
//தமிழ் விக்கிப்பீடியாவின் தோன்றும் மாதப் பெயர்களின் சீர்மை கருதி திரான்சுலேட்டு விக்கி தளத்தில் மாற்றம் செய்துள்ளோம். //
இந்த வரி தான் குழப்பத்துக்குக் காரணம் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும். நான் இப்போது புதிதாக எதையும் மாற்றவில்லை. ஏற்கனவே இவ்வாறு மாற்றி இருந்ததைச் சுட்டினேன். சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் ஆகிய பெயர்கள் தான் திரான்சுலேட்டு விக்கியில் உள்ளதா என்று யாராவது உறுதிப்படுத்தினால் நலம்.--இரவி (பேச்சு) 11:55, 15 மார்ச் 2012 (UTC)
- திரான்சிலேட்டு விக்கியில் எந்த மாற்றத்தையும் இப்போதைக்கு செய்யாதீர்கள். கையொப்பங்களில் மார்ச் என்று தான் வருகிறது, மார்ச்சு அல்ல.--Kanags \உரையாடுக 13:03, 15 மார்ச் 2012 (UTC)
மாதப்பெயர்கள் குறித்து திரான்சிலேட்டு விக்கியில் எந்த மாற்றத்தையும் செய்யும் எண்ணம் இல்லை. ஆனால், யாராவது இங்கு சீராகப் பின்பற்ற வேண்டிய மாதப் பெயர் முறைமை என்ன என்று தெளிவுபடுத்தினால், அதனைப் பின்பற்றலாம். நன்றி--இரவி (பேச்சு) 13:07, 15 மார்ச் 2012 (UTC)
ஆர்வத்தைக் கூட்ட
தொகுமுதற்பக்க கட்டுரை வார்ப்புரு இடும்போது கட்டுரை வடிவ முடிவில் ஆர்வத்தை கூட்டுமாறு வாசகம் அமைத்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றுகிறது. உதாரணத்திற்கு புரட்சியாளர்கள் கட்டுரை என்றால் அவர்களை கைது செய்தது, நீதிமன்றத்தில் நிறுத்தியது, நாடு கடத்தப்பட்டது இதைப்போல செய்திகளுடன் முடித்தால் அதைப்படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் வாய்ப்பு உள.
வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?
தொகுமுதற்பக்கத்தைச் சீராக இற்றைப்படுத்தத் தொடங்கிய பிறகு அப்பக்கத்துக்கான வரவுகள் கூடியுள்ளதைக் காண்கிறோம். தற்போது ஒரு நாளைக்கு 2500 பக்கப் பார்வைகள் எனக் கொண்டால் வாரம் 17500 பார்வைகள். இதனைக் கருத்தில் கொண்டு ஞாயிறு, புதன் என வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகளை இற்றைப்படுத்தலாமா? வாரம் மொத்தம் நான்கு கட்டுரைகள் இடம்பெறும். முதற்பக்கப் பரிந்துரையில் போதுமான கட்டுரைகள் உள்ளன. இன்னும் கூடுதலான கட்டுரைகளை இனங்கண்டு பரிந்துரையில் சேர்க்கலாம். இதில் உள்ள ஒரே சிக்கல்: குறுந்தட்டுக் கட்டுரைகளைச் செப்பனிடத் தேவைப்படும் நேரத்தைக் காண்கையில், இவற்றை இன்னும் முனைந்து உரை திருத்தி மேம்படுத்த வேண்டி இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 08:41, 9 மார்ச் 2012 (UTC)
+1 ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்காவது 15 முதற்பக்க கட்டுரைகள் தேவைப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:20, 9 மார்ச் 2012 (UTC)
தற்போது 45 பரிந்துரைகள் உள்ளன. அதனால் வாரமிரு முறை சற்று எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். 7ஆம் மாதத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:25, 28 மே 2012 (UTC)
- ஜுலையிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றே தோன்றுகிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:59, 29 மே 2012 (UTC)
வாரமிரு முறை இற்றைப்படுத்துவதை சற்று தள்ளிப்போடலாம் என நினைக்கிறேன். ஏனெனில்:
- ஒரு சிலரே முதற்பக்கக் கட்டுரை ஆக்கத்தில் ஈடுபடுவதாலும் பரிந்துரைப்பதாலும் ஒரே மாதிரியான கட்டுரைகளையே தொடர்ந்து இடுகிறோமோ என்று ஒரு தயக்கம்
- முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகள் வாரம் முழுதும் சில நூற்றுக்குக் குறைவான பக்கப் பார்வைகளையே பெறுகின்றன. வாரமிரு முறை என்றால் இது இன்னும் குறையும். முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்கும் நேரம். உழைப்புக்கு இது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல கட்டுரைகளை மக்கள் பார்வையில் சேர்க்க இன்னும் கூடுதல் காலம் காட்சிப்படுத்தலாமோ என்று தோன்றுகிறது.
- ஒரு முதற்பக்கக் கட்டுரையைச் செப்பனிட்டு மேம்படுத்த குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. தனிப்பட்ட அளவில், என்னால் இந்த நேரத்தை ஒதுக்கிச் செயற்பட முடியவில்லை. அதே வேளை, தாங்கள் தொடங்கிய கட்டுரைகள் தவிர்த்து, பொதுவாக அனைத்து முதற்பக்கக் கட்டுரைகளையும் இற்றைப்படுத்துவோர் குறைவே. ஏற்கனவே காட்சிப்படுத்திய சில கட்டுரைகள் கூட இன்னும் மேம்பாடு வேண்டி நிற்கின்றன--இரவி (பேச்சு) 07:25, 29 மே 2012 (UTC)
\\முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் கட்டுரைகள் வாரம் முழுதும் சில நூற்றுக்குக் குறைவான பக்கப் பார்வைகளையே பெறுகின்றன.\\
இந்த ஒரு காரணத்தை கேட்டவுடனேயே இதை தள்ளி வைப்பது சிறந்தது என்று தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:58, 29 மே 2012 (UTC)
- கட்டுரைகளைப் பரிந்துரை செய்யும்போதே முதற்பக்க வார்ப்புரு இடுவது தேவையற்றது எனக் கருதுகிறேன். ஏனெனில் பரிந்துரைக்கும் அனைத்து கட்டுரைகளும் முதற்பக்கத்தில் இடம்பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில நிராகரிக்கப்படலாம். எனவே வரும் வாரத்தில் இடம்பெறப்போகும் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்த வார்ப்புரு இடலாம் என்பது என் கருத்து.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:47, 29 மே 2012 (UTC)
இற்றைப் பொறுப்பு
தொகுமுதற்பக்கத்துக்கான கட்டுரைகள் தெரிவு, இற்றைப்படுத்தல் பொறுப்பை எடுத்துக் கொள்ள யாருக்கேனும் விருப்பமா? செப்டம்பர் முதல் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 08:27, 25 சூலை 2012 (UTC)
சென்னை உயர்நீதிமன்றம்
தொகுபார்வதி, சென்னை உயர் நீதிமன்றம் 150ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அதனை முதற்பக்கக் கட்டுரையாக இட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இது போன்ற சிறப்பு நாட்களை ஒட்டி கட்டுரைகளை முதன்மைப்படுத்துவது ஏற்புடையதே. எனினும், கடந்த சில மாதங்களாக, முதலில் பரிந்துரைகளாக இட்டு, பிறகு அவற்றை ஒரு மாதம் முன்னதாகவே வர இருக்கும் கட்டுரைகள் என்று அறிவித்தே முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தினோம். இதன் மூலம் அனைத்துப் பரிந்துரைகளும் பங்களிப்பாளர்களின் ஒப்புதல் பெறுவதோடு காட்சிப்படுத்தும் முன் அவற்றை மேம்படுத்துவதற்கான காலமும் கிடைக்கும். எனவே, நீங்கள் விரும்பும் கட்டுரைகளையும் முதலில் பரிந்துரையாக இட்டு பிறகு முன்கூட்டியே அறிவித்துக் காட்சிப்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 18:57, 8 செப்டெம்பர் 2012 (UTC)
மேற்கண்ட காரணம் கருதியே இட்டேன். சிறிது குழப்பமாகவே இருந்தது. இனி தாங்கள் கூறியவாறே செய்கிறேன் ரவி. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:22, 9 செப்டெம்பர் 2012 (UTC)
பரிந்துரைகளில் கையொப்பம்
தொகுமுதற்பக்கக் கட்டுரைகளைப் பரிந்துரை செய்யும் போது கையொப்பம் அல்லது பரிந்துரைக்கும் நாளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஏனெனில் பரிந்துரைத்து நீண்ட நாட்களாகியும் முதற்பக்கத்தில் இடம்பெறாத நிலை ஏற்படுதலைத் தவிர்க்கலாம். (எனக்கும் சரிபார்க்க, தெரிவு செய்ய உதவியாக இருக்கும்:)...) நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:55, 24 செப்டெம்பர் 2012 (UTC)
வார்ப்புருக்கள்
தொகுஇந்தக் கிழமை காட்சிப்படுத்தப்படுகின்ற முதற்பக்கக் கட்டுரைகளுக்கான வார்ப்புருக்கள் ஏதும் இன்னும் இடப்படவில்லை. --மதனாகரன் (பேச்சு) 10:51, 9 அக்டோபர் 2012 (UTC)
- ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:56, 9 அக்டோபர் 2012 (UTC)
அது ஒன்னுமில்லிங்க மாசுடர். இந்த ஞாயிற்று கிழமை எங்களூரில் அதிக நேர மின்தடை. திங்கள் வேலைப்பளு அதிகரிக்க திங்களிரவே என்னால் கூட்டுமுய்யற்சியையே இற்றைப்படுத்த முடிந்தது. அதனால் முதற்பக்க கட்டுரை தொடர்பான வார்ப்புருக்களை இடவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 9 அக்டோபர் 2012 (UTC)
எப்படி மேம்படுத்துவது?
தொகுசக்தி வை. கோவிந்தன் கட்டுரையின் மேற்கோள் பிழைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. கட்டுரை முழுமையாக இருக்கிறது. இனியும் மேம்படுத்த வேண்டும் என்றால் எவ்வாறு என விளக்க வேண்டுகிறேன்.--பொன்னிலவன் (பேச்சு) 19:38, 6 மார்ச் 2013 (UTC)
முதற்பக்க கட்டுரை பரிந்துரை
தொகுசிலகாலமாக விக்கிக்கு முதற்பக்க கட்டுரை காட்சிப்படுத்த கட்டுரைகள் பரிந்துரைக்கப்படவில்லை என்ற கருத்து நிலவியது. ஆகையால் பல நாள்கள் இற்றை செய்யப்படாமலும் இருந்தது. தற்போது இற்றை செய்யப்படுபவை பரிந்துரைகளிளிருந்தா??, நான் சென்ற மாதம் ஒரு கட்டுரையை பரிந்துரைத்திருந்தேன். அதற்கு எந்தக் கருத்தும் இடப்படவில்லை. அதற்குத் தகுதியில்லையா?? கூறவும் மேம்படுத்துகிறேன். கருத்துக்கள் இல்லாவிடில் கட்டுரையை விரிவாக்க ஆர்வம் இருக்காது. ஆகையால் இடப்படும் பரிந்துரைகள் சிறப்பில்லைஎனில் குறிப்பிட்டால் நலம். அல்லாவிடில் காட்சிப்படுத்தப்பைடவுள்ள பட்டியலில் இடவும். இது சம்பந்தமாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி.....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:56, 23 பெப்ரவரி 2014 (UTC)
எல்லாத்துக்கும் நேரக்குறைவுதான் காரணம். தகுதிக் குறைவல்ல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:37, 23 பெப்ரவரி 2014 (UTC)
- தென்காசியாரே. // எல்லாத்துக்கும் நேரக்குறைவுதான் காரணம். // பயனர்களுக்கா???,--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:52, 24 பெப்ரவரி 2014 (UTC)
இல்லை. முதற்பக்கப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:08, 24 பெப்ரவரி 2014 (UTC)
யார் யார் பொறுப்பில் உள்ளார்கள்?--aho;- பேச்சு 14:57, 24 பெப்ரவரி 2014 (UTC)
- நீங்கள் பொறுப்பை கேட்கிறீர்களா இல்லை பொறுப்பை கேட்கிறீர்களா?? :P--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:59, 24 பெப்ரவரி 2014 (UTC)
- //யார் யார் பொறுப்பில் உள்ளார்கள்?// ?????????--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:19, 24 பெப்ரவரி 2014 (UTC)
இங்குள்ளது--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:20, 24 பெப்ரவரி 2014 (UTC)
பக்க வடிவமைப்பு மாற்றம்
தொகுபரிந்துரைப் பக்கத்தின் வடிவமைப்பு, பரிந்துரைக்கப்படும் கட்டுரையை ஆதரித்தோ, மறுத்தோ மற்றவர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே அதனை மாற்றி அமைத்தேன். அதனை ஆதரித்து ஶ்ரீகர்சன் எனது பேச்சு பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆன்டன் அது சிக்கலான வடிவம் என நீக்கிவிட்டு, எனது பேச்சு பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஆன்டனுக்கு நான் விளக்கம் எழுதியிருக்கிறேன். அவை அனைத்தையும் கீழே பதிகிறேன் மற்றவர்களின் எதிர்வினைக்காக: விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் பக்கத்தின் வடிவமைப்பை மாற்றியமைத்தமைக்கு நன்றி. தற்போது பரிந்துரைகளை இட இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:30, 4 ஏப்ரல் 2014 (UTC)
- சிக்கலான அமைப்பு தேவையில்லை. எளிமையாக இருக்கட்டும். அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டுச் செய்யுங்கள். --AntonTalk 18:52, 4 ஏப்ரல் 2014 (UTC)
- ஆன்டன், நான் பரிந்துரைத்திருந்த வடிவம் எப்படி சிக்கலானது எனப் புரியவில்லை. மேலே ஶ்ரீகர்சன் அப்பரிந்துரைதான் இலகுவாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்கிறார். முதற்பக்கத்திற்கான கட்டுரையை ஒருவர் பரிந்துரைக்க வேண்டும்; அதனை ஆதரித்தோ, மறுத்தோ மற்றவர்கள் கருத்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில் அக்கட்டுரையை முதற்பக்கத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் விதியென நான் புரிந்துகொண்டு இருக்கிறேன். ஆனால் தற்பொழுதைய வடிவத்தில் பரிந்துரைப்பவர் தன் கையொப்பத்தை இடுகிறார். அதை ஆதரித்தோ, மறுத்தோ எங்கு கூறுவது என்பது தெளிவாக இல்லை; இதனாலேயே மற்றவர்கள் அப்பணியைச் செய்வதில்லை. எனவேதான் புதியவடிவத்தைப் பரிந்துரைத்தேன். மற்றவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டுமென்றால் எங்கு கேட்க வேண்டும்? பரிந்துரைத்த வடிவத்தை நீக்குவதற்கு முன்னர் நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கேட்டீர்கள்? --பொன்னிலவன் (பேச்சு) 07:16, 7 ஏப்ரல் 2014 (UTC)
அது சிக்கலான வடிவமைப்பு தான். டேபிளில் ஒவ்வொரு கட்டுரை பரிந்துரைக்கும் போதும் வரியை கூட்ட வேண்டும். சரியாக ஒரு செல்லை கன்டுபிடித்து கட்டுரையையும் கருத்துக்களையும் இட வேண்டும். நிறைய கட்டுரைகளுக்கு எதிர்கருத்துகள் இருக்காது. அதற்கான செல் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:28, 7 ஏப்ரல் 2014 (UTC)
//பரிந்துரைப் பக்கத்தின் வடிவமைப்பு, பரி//
எங்கே பரிந்துரைக்கப்பட்டது. எத்தனை பேர் வாக்களித்தார்கள்? பக்கத்தின் இணைப்பைத் தரவும். புதிதாக வந்து பரிந்துரைப்பவர்கள் எப்படி டேபிளை தொகுக்கத் தெரிந்தவர்களாய் இருப்பார்கள்? முதற்பக்க இற்றைப்படுத்தலில் உள்ளவர் யாரிடமாவது இது பற்றி உரையாடினீர்களா?
ஸ்ரீகர்சன் எல்லா இடத்திலும் தொகுத்துப் பழகி விட்டார். அவருக்கு விக்கி நன்கு பழக்கமாகிவிட்டது. எல்லோரும் அப்படி இருப்பார்கள் என எதிர்பார்க்க இயலாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:32, 7 ஏப்ரல் 2014 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:14, 7 ஏப்ரல் 2014 (UTC)
- ஆன்டன், நான் யாரிடமும் கேட்கவில்லை. கேட்க வேண்டும் எனத் தெரியாது. எனவேதான் எங்கு கேட்க வேண்டும் எனக் கேட்க வேண்டும் என வினவி இருக்கிறேன். யார் யாரிடம் கேட்க வேண்டும் என அறிவதற்காகத்தான் "பரிந்துரைத்த வடிவத்தை நீக்குவதற்கு முன்னர் நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கேட்டீர்கள்?" என வினவி இருக்கிறேன்.:-)--பொன்னிலவன் (பேச்சு) 09:11, 15 ஏப்ரல் 2014 (UTC)
- தென்காசியாரே, 1. எதிர்கருத்தும் கூறலாம் என்பதை எடுத்துரைப்பதற்காகவாவது "எதிர்க்கருத்து" என்னும் களம் தேவை. இடத்தை அடைக்கும் என்னும் கூற்று ஏற்புடையாதாக இல்லை. 2. விக்கிப்பீடியர்கள் முதல்வரியில் இருப்பதைப் பார்த்து அதனைப் போலவே செய்யத் தெரியாதவர்கள் என்னும் தொனியில் இருக்கிறது உங்கள் எதிர்வினை! ஶ்ரீகர்சனை போல மற்றவர்களும் கற்றுக்கொள்வார்கள் என ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? 3. முதற்பக்க இற்றைப்படுத்தலே ஒழுங்காக நடக்காதபொழுது அதில் யாரேனும் இருப்பார்கள் எனத் தோன்றவில்லை. 4. சரி. போனது போகட்டும். ஒரு கட்டுரையை ஒருவர் பரிந்துரைக்க, மற்றவர்கள் அதனை வழிமொழியவோ மறுக்கவோ வாய்ப்புள்ள "எளியமையான" வடிவத்தை நீங்கள் உருவாக்குங்களேன்; எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும். --பொன்னிலவன் (பேச்சு) 09:11, 15 ஏப்ரல் 2014 (UTC)
//இடத்தை அடைக்கும் என்னும் கூற்று ஏற்புடையாதாக இல்லை.//
இதற்கு நான் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு செயல் விளக்கம் தருகிறேன்.
//ஶ்ரீகர்சனை போல மற்றவர்களும் கற்றுக்கொள்வார்கள் என ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?//
எல்லோரும் ஒரே போல் எல்லாம் இருக்க மாட்டார்கள். மேலும் நான் மேலே கொடுத்துள்ள இடத்தை அடைக்கும் என்பதோடு இது தொடர்புடையது.
// "எளியமையான" வடிவத்தை//
இதுவரிக்கும் நடந்த வாக்கெடுப்புகள், பரிந்துரைகள் எல்லாம் எளிதாகவே நடந்துள்ளன. மேலும் இதற்கும் நான் மேலே கொடுத்துள்ள இடத்தை அடைக்கும் என்பதோடு இது தொடர்புடையது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:52, 15 ஏப்ரல் 2014 (UTC)
செயல் விளக்கம்
தொகுபரிந்துரைக்கப்படும் கட்டுரை | வழிமொழிகிறேன் | மறுக்கிறேன். ஏனெனில்.. | குறிப்புகள் |
ந. சஞ்சீவி | விருப்பம் --பொன்னிலவன் (பேச்சு) 11:52, 4 ஏப்ரல் 2014 (UTC) | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| |
க. நவரத்தினம் | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| ||
கிறிஸ்டோபர் ரீவ் | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| ||
மணியம்மையார் | விருப்பம்--பொன்னிலவன் (பேச்சு) 11:52, 4 ஏப்ரல் 2014 (UTC) | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| |
கிருஷ்ணா டாவின்சி | விருப்பம்--பொன்னிலவன் (பேச்சு) 11:52, 4 ஏப்ரல் 2014 (UTC) | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| |
மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| ||
டைகர் வரதாச்சாரியார் | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
| ||
எம். டி. இராமநாதன் | *மேற்கோள்கள் தேவை. கட்டுரை முக்கியத்துவம் உள்ளதா? --Anton (பேச்சு) 09:21, 1 செப்டம்பர் 2013 (UTC)
|
மேலே உள்ளதை பார்த்துவிட்டு வடிவம் பொருந்துகிறதா இல்லையா என நீங்களே தெரிவிக்கவும். உதாரணத்துக்கு மேலே வர்லாறு பகுப்பில் ஒரு 100 கட்டுரைகள் இருப்பதாக வையுங்கள். எனக்கு 51ஆவது கட்டுரையில்விருப்பம் தெரிவிக்க நான் அதை தேடிக்கண்டுபிடிக்கவே நேரமாகும் (புதுப் பயனர் என்றால்) மேலும் இங்கு வரும் முதியவர்கள் நிறைய பேருக்கு எளிதில் எல்லாம் எல்லாத்தையும் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்னர் நடந்த வாக்கெடுப்புகளிலும் பரிந்தரை தெரிந்தெடுப்புகளிலும் பழைய வடிவத்தில் எந்த சிக்கலும் இருந்ததில்லை.
மேலும் இது இடத்தைக் கண்டிப்பாக அடைக்கும். மேலுள்ள அட்டவணை ஒரு சின்ன எடுத்துக்காட்டு. scroll செய்து பார்க்கவே நேரம் பத்தாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:58, 15 ஏப்ரல் 2014 (UTC)
- தென்காசியாரே, உங்களின் வாதங்கள் யானைக்கு அர்ரம்ன்னா, குதிரைக்கு குர்ரம் என்பதைப்போல இருக்கின்றன. //இதற்கு முன்னர் நடந்த வாக்கெடுப்புகளிலும் பரிந்தரை தெரிந்தெடுப்புகளிலும் பழைய வடிவத்தில் எந்த சிக்கலும் இருந்ததில்லை.// - நான் விக்கிக்கு வந்த நாளில் இருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறேன். பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளுக்கு யாரும் வாக்களிப்பதில்லை. ஆனால் அதிகளவு வாக்குகளைப் பெற்ற கட்டுரைகளைத்தான் முதற்பக்கத்தில் இடுவதாக நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம். ஏன் வாக்களிக்கவில்லை எனப் பார்த்தால், அதனை எங்கு எவ்வாறு இடவேண்டும் என்னும் தெளிவான வழிகாட்டல் இல்லை. அதனை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம். இடம்பிடிக்கும் என்பதற்காக, மறுத்துரைக்கும் வாய்ப்பையே மறுத்தால் எப்படி? --பொன்னிலவன் (பேச்சு) 03:56, 16 ஏப்ரல் 2014 (UTC)
//ஆனால் அதிகளவு வாக்குகளைப் பெற்ற கட்டுரைகளைத்தான் முதற்பக்கத்தில் இடுவதாக நாம் கூறிக்கொண்டு இருக்கிறோம்.//
இப்படி எங்கு நடந்தது? யார் யார் இப்படி கூறினார்கள்? காட்டவும்.
//ஏன் வாக்களிக்கவில்லை எனப் பார்த்தால், அதனை எங்கு எவ்வாறு இடவேண்டும் என்னும் தெளிவான வழிகாட்டல் இல்லை.//
அப்படி இல்லங்க. விக்கியில் நிர்வாகத் தேர்ந்தெடுப்பு நடக்கும் போது விக்கியின் மேல் பகுதியில் அதன் அறிவிப்பு இருக்கும். அதை பார்த்துவிட்டு 30 பேருக்கு மேல் பழைய முறையின் படியே வாக்களித்துள்ளார்கள்.
//உங்களின் வாதங்கள் யானைக்கு அர்ரம்ன்னா, குதிரைக்கு குர்ரம் என்பதைப்போல இருக்கின்றன.//
இந்த மாதிரி பேச்சு பழக்கம் இல்லாதவரிடம் வேண்டாம். நான் பதிலுக்கு உங்கள் வாதங்களை உவமை கூறி பேச ஆரம்பித்தால் அது விக்கிக்கு அவ்வளவு அழகாய் இருக்காது. அது முறையும் இல்லை.
// அதனை எங்கு எவ்வாறு இடவேண்டும் என்னும் தெளிவான வழிகாட்டல் இல்லை//
நிர்வாக வாக்கெடுப்பில் வாக்களித்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் வேட்பாளருக்கு கீழே எதிர்ப்பு என்னும் பகுதியை உருவாக்கி அதன் கீழ் கையெழுத்தையும் கருத்தையும் இடுவார்கள். இந்த பக்கத்தில் வேண்டுமானால் கட்டுரைக்கு கீழே உங்கள் ஆதரவை இந்த குறிக்குக் கீழும் எதிர்ப்பை இந்த குறிக்குக் கீழும் போட வேண்டும் என்ற விதியைச் சேர்க்கலாம்.
//இடம்பிடிக்கும் என்பதற்காக, மறுத்துரைக்கும் வாய்ப்பையே மறுத்தால் எப்படி?//
இரண்டும் தொடர்பற்றது. மறுத்துறைக்கும் வாய்ப்பு பழைய முறையிலேயே உள்ளது.
நீங்கள் எங்கு இதன் வடிவமைப்பு பற்றி கேட்க வேண்டும் எனத் தெரியாது என்றீர்கள் அல்லவா. அதை இந்த பேச்சுப்பக்கத்திலேயே உருவாக்கி ஆலமரத்தடியில் இணைப்புக் கொடுங்கள். அதிகளவு பயனர்கள் உங்கள் வடிவமைப்பு முறைக்கு ஆதரவாக வாக்களித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 16 ஏப்ரல் 2014 (UTC)
-- பொதுவாக, விக்கியில் அட்டவணை அமைப்பில் உள்ள தகவலைத் தொகுப்பதை சிரமமாக உணர்கிறேன். எது அட்டவணைப்படுத்தப்பட வேண்டிய தகவலோ, அதற்கு மட்டும் அந்த வடிவமைப்பைப் பயன்படுத்துவது சிறந்தது. பரிந்துரைகள் மீதான உரையாடல் போன்றவை நீண்ட உரையாடலாக தொடரக்கூடியவை. இவற்றுக்கு அட்டவணை வடிவம் ஒத்து வராது. ஒவ்வொரு கட்டுரைத் தலைப்பின் கீழேயே உரையாடும் தற்போதைய வழக்கம் போதுமானதாகவே உள்ளது. போதிய பயனர்கள் இவ்வுரையாடல்களில் பங்கேற்க வில்லை என்பதற்கு ஆர்வமின்மை, நேரமின்மை முதலிய பல காரணங்கள் இருக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 11:54, 16 சூன் 2014 (UTC)
இற்றைப்படுத்தல்
தொகுமுதற்பக்கத்தில் இடம்பெற்ற / இடம்பெறப்போகும் பரிந்துரைகள் பகுதியில் கடந்த வாரம் முதற்பக்கத்தில் இடம்பெற்ற ஐ. மாயாண்டி பாரதி உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெறவில்லை. சரிசெய்க.--பொன்னிலவன் (பேச்சு) 04:00, 16 ஏப்ரல் 2014 (UTC)
பரிந்துரைகள் தெரிவு குறித்த கருத்து
தொகுஇப்பக்கத்தைத் தொடங்கியதன் நோக்கம் என்னவென்றால்:
முதற்பக்கத்தில் கட்டுரைகளை இற்றைப்படுத்தும் பொறுப்புள்ளவர் தன் கண்ணில் பட்ட கட்டுரைகளை மட்டும் காட்சிப்படுத்தாமல், விக்கிச் சமூகத்தின் கருத்துகளை உள்வாங்கி பரந்துபட்ட தலைப்புகளைக் காட்ட வேண்டும். ஒரு கட்டுரையைக் காட்சிப்படுத்தும் முன்னரே அக்கட்டுரை விக்கிச் சமூகத்தின் கண்ணில் பட்டு பிழைகள் களைந்து, மேம்படுத்தப்பட வேண்டும்... போன்ற காரணங்களுக்காகவே.
முதற்பக்கத்தில் காட்டப்படும் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் அல்ல. சிறப்புக் கட்டுரைகளுக்கான தகுதிகளையே நாம் மீள வரையறை செய்ய வேண்டும் என்ற தொடர் வேண்டுகோளும் உண்டு. எனவே, குறித்த ஒரு கட்டுரையை முதற்பக்கத்தில் காட்டியே ஆக வேண்டும் / காட்டவே கூடாது என்ற போக்கில் தொடரும் நீண்ட உரையாடல்களைத் தவிர்க்கலாம். ஏற்புடைய 9 பரிந்துரைகள் இருந்தால் அவற்றை முதலில் காட்டிவிட்டு, மாற்றுக் கருத்துடைய பரிந்துரைகளைக் காத்திருப்பு வரிசையில் வைக்கலாம்.
தேவைப்பட்டால், முதற்பக்கக் கட்டுரைக்கான தகுதிகள் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளவற்றை மீளாய்வு செய்து, சீராக அனைத்து கட்டுரைகளிலும் அத்தகுதிகள் உள்ளனவா என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டுக்கு, கட்டுரைகள் ஒரே மூலத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது, குறைந்தது 5 மூலங்கள் வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகளைக் கலந்துரையாடி இணக்க முடிவாக அறிவிப்பது நன்று.--இரவி (பேச்சு) 12:02, 16 சூன் 2014 (UTC)
பழைய முதற்பக்கக் கட்டுரைகளைக் காட்டலாம்
தொகுஅண்மைக்காலமாக, புதிய முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்கம், காட்சிப்படுத்தல் ஆகியவற்றில் தேக்க நிலை காணப்படுகிறது. அடிக்கடி முதற்பக்கத்தில் புதிய கட்டுரைகளைக் காட்டி வருதல் நன்று என்பதால், போதுமான அளவு புதிய கட்டுரைகள் உருவாகும் வரை, ஏற்கனவே காட்சிப்படுத்திய பழைய முதற்பக்கக் கட்டுரைகளை மீண்டும் காட்டி வரலாமே?--இரவி (பேச்சு) 14:26, 26 அக்டோபர் 2014 (UTC)
- {{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}, பல காலமாக முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். இவற்றை அடிக்கடி மாற்றும் போது வாசகர் எண்ணிக்கை கூடியதாக சோடாபாட்டில் ஒரு முறை கூறினார். மேற்கண்ட பரிந்துரையைச் செயற்படுத்த வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 21:55, 4 நவம்பர் 2014 (UTC)
- இரவி அவர்களே தற்போது புதிய கட்டுரைகளை இயன்றவரை தேடி எடுத்து மு.ப வில் காட்ட முயல்கின்றேன். தரமான கட்டுரைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் உங்கள் பரிந்துரையை நடைமுறைப்படுத்தலாம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:04, 9 நவம்பர் 2014 (UTC)
- சிறீகர்சன், இதனைக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:25, 28 மார்ச் 2015 (UTC)
பாரதிய ஜனதா கட்சி - காரணம் என்ன?
தொகுயாரோ ஒருவர் பாஜக கட்டுரை முதல்பக்கத்தில் வருவதற்கு காரணம் என்ன என்று கேட்டுள்ளார். யாரெனப் பார்க்கவில்லை. ஒரு கட்டுரையை முதல் பக்கத்துக்கு கொண்டுவர ஒரு காரணமும் தேவையில்லை. கட்டுரையின் தரம் மட்டுமே முக்கியம் என்பதை நிறைவுறுத்துகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:41, 8 ஏப்ரல் 2015 (UTC)
- இங்கு ஒருவர் தான் சட்டம் இயற்றுவார். மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டும்.--Kanags \உரையாடுக 21:18, 8 ஏப்ரல் 2015 (UTC)
தென்காசி சுப்பிரமணியன், மேற்கண்ட கேள்விக்கான இணைப்பைத் தர முடியுமா?--இரவி (பேச்சு) 03:04, 9 ஏப்ரல் 2015 (UTC)
- பயனர்:Kuzhali.india மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் என்பதன் கீழ் நகர்த்தியிருந்தார். எனவே நான்தான் மேம்பாடு தேவைப்படுவதற்காண காரணம் என்ன என்பதை அறிய சாய்வெழுத்தில், சுருக்கமாக காரணம் என்ன? எனக் கேட்டிருந்தேன். இதன் அர்த்தம் பாஜக கட்டுரை முதல்பக்கத்தில் வருவதற்கு காரணம் என்ன அல்ல. மாறாக, மேம்பாடு தேவைப்படும் காரணம் என்ன என்பதாகும். @Ravidreams: மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் என்பதன் கீழ் காணுங்கள். தென்காசியார், பழைய உரையாடல்களை புதுப் பார்வையில் பார்க்காதீர்கள். பார்த்தால் இப்படித்தான் [[File:|18px|link=]] ஆகிவிடும். --AntonTalk 04:27, 9 ஏப்ரல் 2015 (UTC)
அன்டன், தெளிவுபடுத்தியதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 07:04, 9 ஏப்ரல் 2015 (UTC)
User:AntanO ஓ நீங்க அப்பிக்கா சொன்னீங்க. நான் இப்பிக்கா நினைச்சுட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:08, 10 ஏப்ரல் 2015 (UTC)
//பயனர்:Kuzhali.india மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் என்பதன் கீழ் நகர்த்தியிருந்தார்//
விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு இதில் குழலி பெயரில்லையே!?! எனில் அந்த தொகுப்பில் செய்யப்பட்டவற்றை மீள்தொகுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:10, 10 ஏப்ரல் 2015 (UTC)
விளக்கம்
தொகு@AntanO: அவர்களே முதற்பக்கக் கட்டுரைத்தகுதிகளில் //கட்டுரைகள் ஒரே மூலத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது, குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்.// என்பது பற்றிய விரிவான விளக்கம், தகுத்திக்கான காரணம் என்பவற்றை குறிப்பிட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:32, 16 மார்ச் 2017 (UTC)
- கட்டுரைகள் சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயம். காண்க: விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை. முதற்பக்கம் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டியது இன்னும் அவசியம். ஒருசில மூலங்களைக் கொண்ட கட்டுரை பற்றிய நம்பகத்தன்மையும் கேள்விக்குட்படுத்தலாம். குறைந்தது 5 மூலங்கள் இல்லாத கட்டுரை பரந்தளவு முக்கியத்துவம் இல்லாத கட்டுரையாகவும் இருக்கலாம். மேலும், குறைந்தது 5 மூலங்கள் வேண்டும் என்பது ஒரு சிறிய தகுதியே. கட்டுரையில் மூலம் ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பது கவனிக்கப்படவில்லை. காண்க: en:Wikipedia:Identifying reliable sources --AntanO 04:48, 17 மார்ச் 2017 (UTC)
- @AntanO:, அவர்களே தங்கள் விளக்கத்திற்கு நன்றி! தற்போது சில காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கக்கட்டுரையாகப் பரிந்துரைக்கப்பட்ட கட்டுரைகளுக்கு 5 மூலங்கள் கொண்டு எழுதப்பட் வேண்டும் என காரணம் கூறி நிராகரித்தீர்கள். அக்கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலவிக்கியிலிருந்தே மொழிபெயர்க்கப்படுகின்றன. அந்தவகையில் ஆங்கில விக்கியில் பல மூலங்களைக் கொண்டுதானே எழுதியிருப்பார்கள். விளக்குக...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:43, 17 மார்ச் 2017 (UTC)
- இளவரசர் உரூப்பர்ட்டின் துளி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:14, 20 மார்ச் 2017 (UTC)
- அத்துடன் இவ்வாறு எதிர்காலத்திலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து விரிவாக்கப்படும் கட்டுரைகள் முதற்பக்கக்கட்டுரைக்குப் பரிந்துரைக்கப்படும் போது "5 மூலங்கள் கொண்டு எழுதப்படல் வேண்டும்" எனும் காரணம் மூலமாக நிராகரிக்க்காது இருக்க விருப்பம். மேலும் மூலங்களை வைத்து மேலும் எழுதக்கூடிய கட்டுரையாக இருக்கும் சந்தர்ப்பம் இருப்பின் நிராகரிக்கலாம். எ.கா:-தமிழிசை....--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:31, 20 மார்ச் 2017 (UTC)
- இளவரசர் உரூப்பர்ட்டின் துளி கட்எடுரையில் எத்தனை உசாத்துணைகள் உள்ளன? --AntanO 09:34, 20 மார்ச் 2017 (UTC)