விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/2012/ஆகஸ்ட்

மாதங்கள் அடிப்படையில் துணைப்பக்கங்கள், தலைப்புகள், வார்ப்புருக்கள் உருவாக்கும் போது Translatewikiயில் உள்ளவாறு உருவாக்கலாம். இவ்வாறு சீர்மை பேணுவது பிற்காலத்தில் ஏதும் வராமல் தடுக்கலாம். குறுந்தட்டுத் திட்டம் தொடர்பான நிரலாக்கத்தை இத்தகைய சீர்மையின்மை சிக்கலை உருவாக்கியதாக சிறீக்காந்த் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது--இரவி 10:49, 21 பெப்ரவரி 2012 (UTC)

புரியவில்லை. ஆனால், ஏதேனும் பிழையிருப்பின் நீங்களே மாற்றிவிடுங்கள். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:52, 21 பெப்ரவரி 2012 (UTC)
சூரியா, அண்மையில் உருவாகிய பக்கத்ததில் விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012/பிப்ரவரி என்பதில் மாதப்பெயர் பிப்ரவரி என்று வருகிறது. ஆனால், மேலே நமது கையெழுத்தில் உள்ள மாதத்தின் பெயர் பெப்ரவரி என்று காட்டுகிறது. இது translatewikiயில் இருந்து வருகிறது என்று நினைக்கிறேன். இதே போல் அங்கு ஒவ்வொரு மாதமும் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து அதே போல் நாமும் பக்கங்களுக்குப் பெயரிடலாம் என்று கருதுகிறேன். இவ்வாறு மாதப்பெயர்கள் சீர்மை இல்லாமல் இருப்பதால் பிற்காலத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் எனில், இயன்ற அளவு மாதங்கள் குறித்த பக்கங்களை ஒரே போல் ஆக்குவது நன்று. பெயர்கள் வெவ்வேறு மாதிரி இருந்ததால் நிரலாக்கத்தில் சிக்கல் வந்ததாக சிறீக்காந்த் சுட்டியுள்ளதைக் காணலாம்.--இரவி 11:15, 21 பெப்ரவரி 2012 (UTC)
ம்ம்ம். சரி சரி. கூடிய விரைவில் மாற்றிவிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி. :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:24, 21 பெப்ரவரி 2012 (UTC)
ஆம்,கூடுமான வரையில் (விக்கிப்பீடியா / மீடியாவிக்கி வெளி பக்கங்களிலாவது) சீராக translatewikiயில் எவ்வாறு இருக்கிறதோ, அதை கடைபிடித்தால் நல்லது. {{CURRENTMONTHNAME}} போன்ற மீடியாவிக்கி மாறிலியை பயன்படுத்தவும் இது உதவும். வழிமாற்று செய்தால் சில சமயம் நிரல்கள் அதெற்கென தனியாக மாற்றவேண்டும், தேவையில்லாதது(அது தான் குறுந்தட்டு நிரலை பாதித்தது). இதனை முன்பே ஆலமரத்தடியில் கேட்டுக்கொண்டேன்.பிழையைக் கண்டு உரையாடலைத் துவங்கியமைக்கு நன்றி இரவி. ஸ்ரீகாந்த் 11:35, 21 பெப்ரவரி 2012 (UTC)

வருங்காலத்தில், Translatewikiயில் இந்த மாறிலிகளை யாராவது மாற்றினாலும் பிரச்சினை வருமே? இதனை எப்படித் தடுப்பது? Translatewikiயில் பிரச்சினைக்குரிய விசயங்களைத் தமிழாக்கும் போது பெரிய எலும்புக்கூடு எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு செய்ய இயலுமா? :)--இரவி 12:08, 21 பெப்ரவரி 2012 (UTC)

மாதப்பெயர்களைப் பொறுத்தவரை translatewiki இல் இன்னும் கிரந்தமுடையவை உள்ளன (ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்). இந்த நான்கிற்கு மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் புதிய மீடியாவிக்கி மாறிலிப் பக்கங்களை உருவாக்கி அவற்றை overwrite செய்துள்ளோம். எ.கா மீடியாவிக்கி:June. பிற எட்டு மாதப்பெயர்களும் translatewiki இல் இருந்து பெறப்படுகின்றன. பிரச்சனைக்குரிய விசயங்களைக் கட்டுப்படுத்த இம்மாதிரி local instances உருவாக்கிக் கொள்ளலாம. ஆனால் அதிக எண்ணிக்கையில் போகும் போது பராமரிப்பு இரட்டிப்பு வேலையாகும். translatewiki தமிழ் மொழிபெயர்ப்பு அண்மைய மாற்றங்களை அவ்வப்போது கண்காணித்து வருவதும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:32, 21 பெப்ரவரி 2012 (UTC)

எந்தெந்த சரங்களை மொழிபெயர்த்தால் இத்தகைய சிக்கல் வரும் என்று இனங்கண்டு, மீடியாவிக்கித் தளங்களில் இதற்கேற்ப எவ்வாறு பெயரிடல் முறைமைகளைக் கையாள வேண்டும் என்பதை விளக்கி ஒரு கையேட்டை உருவாக்கினால் நன்றாக இருக்கும். குறிப்பிட்ட சரங்களில் இந்தக் கையேடுக்கான இணைப்பை comment out செய்து தரலாம்--இரவி 10:58, 22 பெப்ரவரி 2012 (UTC)

Translatewiki-இன் தொடக்கநாட்களில் மட்டுமே பங்களித்துள்ளேன். அப்போது அது முதன்மையாக விக்கித் திட்டங்களை நோக்கியே இருந்தது. இப்போது நிறைய வளர்ந்திருக்கும். அதனால், அங்குள்ள மொழிபெயர்ப்புகளின் நிலையான பதிப்புகளை அவ்வப்போது இங்கு உள்வாங்கிப் பயன்படுத்தும் வசதி உள்ளதா? அப்படி இருந்தால் அங்கு நடக்கும் சிறு மாற்றங்கள் இங்கு பாதிக்காதல்லவா? -- சுந்தர் \பேச்சு 11:18, 22 பெப்ரவரி 2012 (UTC)
அடிப்படை மீடியாவிக்கி இடைமுகத்தைப் பொறுத்த வரை ”நிலையான பதிப்பு” என்று ஏதுமில்லை சுந்தர். செய்யும் மாற்றங்கள் அனைத்தும் திங்கட்கிழமை தோறும் விக்கித்திட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன.--சோடாபாட்டில்உரையாடுக 12:09, 22 பெப்ரவரி 2012 (UTC)
தகவலுக்கு நன்றி, சோடாபாட்டில். அத்தகைய தேவை வந்தால் அந்த வசதியைக் கேட்டுப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:11, 22 பெப்ரவரி 2012 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012/ஆகஸ்ட்

Start a discussion
Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/2012/ஆகஸ்ட்".